Last Updated:
உள்நாட்டு பிரச்சினைகள் வெடித்துள்ள நிலையில் தற்போதைய சூழலில் இந்திய அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது சரியானதாக இருக்காது என்று கூறப்படுகிறது
வங்கதேசத்தில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசியல் பதற்றம் காரணங்களுக்காக இந்த கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் சர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நாடாக உள்ளது. இதற்கிடையே வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ரெடிமேட் ஆடைகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை மீது மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் வர்த்தக ரீதியில் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் காணப்படுகிறது.
மேலும் வங்கதேசத்திலும் அரசியல் ரீதியிலாக பதட்டமான சூழல் காணப்படுகிறது. முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 2025 முதல் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அரசியல் மற்றும் வர்த்தக பதற்றம் காரணமாக இந்த கிரிக்கெட் தொடரை பிசிசிஐ ஒத்தி வைத்துள்ளது. இந்த தொடர்கள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒத்திவைக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் கலந்து பேசி இந்த முடிவை எடுத்திருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வங்கதேசத்தை பொறுத்த அளவில் அங்கு அரசியல் நிலைமை சீராக இல்லை. ஆங்காங்கே உள்நாட்டு பிரச்சினைகள் வெடித்துள்ள நிலையில் தற்போதைய சூழலில் இந்திய அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது சரியானதாக இருக்காது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
July 05, 2025 7:29 PM IST