சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் இருந்த பயணியின் உடைமையில் சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள் அடையாளமிட்டு அனுப்பி இருந்தனர்.
கடந்த ஜூலை 2ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்தடைந்தது.
இரு வெளிநாட்டு ஊழியர்களுக்கு விடுதியில் ச#ண்டை: ஊழியருக்கு சிறை – என்ன நடந்தது?
இந்நிலையில், விமானத்தில் வந்த பயணிகளிடம் விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பயணியின் உடைமையில் மட்டும் சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் அடையாளமிட்டு அனுப்பி இருந்தனர்.
அதாவது, அந்த சூட்கேஸ் பெட்டியை மீண்டும் ஸ்கேன் செய்யவேண்டும் என குறிப்பிட்டு அடையாளத்துடன் அனுப்பி இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனை அடுத்து, விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் அந்த சூட்கேஸை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அதில் சிறிய அளவில் தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது.
அதாவது, மொத்தம் 150 கிராம் எடைகொண்ட அந்த தங்க கட்டிகளின் மதிப்பு சுமார் 15 லட்சம் ரூபாய் இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் அதை கடத்தி கொண்டு வந்த பயணியையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரில் இருந்து தஞ்சாவூர் வந்த ஊழியர்… சில மணிநேரத்திலேயே ப*லியான சோகச் சம்பவம்!