நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க ஹிந்து என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவரின் குற்றச்சாட்டுக்கு பாஜக வேட்பாளரும் நடிகையுமான கங்கனா ரணாவத் பதிலளித்துள்ளார்.
ஹிமாசல பிரதேசம் மாநிலம் மண்டி மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா களமிறங்கியுள்ளார்.
இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின் போது மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான விஜய் வடேட்டிவார் பேசுகையில், மாட்டிறைச்சி பிடிக்கும் என்று கங்கனா ஒருமுறை கூறியுள்ளதாக தெரிவித்தார்.