உங்களுடைய வங்கி அல்லது கிரெடிட் கார்டு வழங்குனர், ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு ஒரு கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட்டை அனுப்புவார். அதில் உங்களுடைய சர்வதேச பேலன்ஸ், கட்டணங்கள், பேமென்ட்கள் மற்றும் அந்த பில்லிங் சைக்கிளுக்கான டிரான்சாக்ஷன்கள் போன்றவை அடங்கும். அடிப்படையில் இது உங்களை பேமென்ட் செய்வதற்கு நினைவூட்டுகிறது. அதே சமயத்தில் உங்களுடைய கடன் பயன்பாட்டை பதிவு செய்ய உதவுகிறது. கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்டில் பின்வரும் தகவல்கள் காணப்படும்:
- செலுத்த வேண்டிய மொத்த தொகை
- செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகை
- பேமென்ட் செலுத்த வேண்டிய டியூ தேதி
- டிரான்சாக்ஷன்கள் மற்றும் நீங்கள் வாங்கிய பொருட்களுக்கான அட்டவணை
- வட்டி மற்றும் தாமதமாக பேமென்ட் செலுத்தியதற்கான கட்டணங்கள் (ஏதேனும் இருந்தால்)
- உங்களுக்கான பணம் மற்றும் கடன் உச்சவரம்புகள்
- ரிவார்டுகளுக்கான பாயின்ட்டுகள்
கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்டின் முக்கியமான அங்கங்கள்:
அந்த பில்லிங் சைக்கிளுக்கான ஆரம்ப மற்றும் இறுதி தேதி
அபராதங்கள் அல்லது வட்டி விதிக்கப்படாமல் இருப்பதற்கு பேமென்ட் செலுத்துவதற்கான இறுதி தேதி
அந்த பில்லிங் சைக்கிளில் நீங்கள் வாங்கிய மொத்த கடன்
தாமதமாக பேமென்ட் செலுத்துவதற்கான கட்டணங்களை தவிர்ப்பதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகை. -டிரான்சாக்ஷன்களின் சுருக்கம்: நீங்கள் செய்த டிரான்சாக்ஷன்கள், பர்ச்சேஸ்கள், கிரெடிட்கள் மற்றும் EMI கடன்கள் போன்றவற்றிற்கான மொத்த விரிவான விவரம்.
செலுத்தாமல் இருக்கும் பேலன்ஸ் தொகைக்கான வட்டி மற்றும் பிற அனைத்து கட்டணங்கள்
உங்களுடைய மொத்த கடன் தொகை மற்றும் இதுவரை நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் மொத்த கடன் தொகை.
கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் (வழக்கமாக 30 நாட்கள்) செய்யப்பட்ட அனைத்து கட்டணங்கள் மற்றும் டிரான்சாக்ஷன்களை வெளிப்படுத்தும் ஒரு டாக்குமெண்ட். அதே சமயத்தில் கிரெடிட் கார்டு பேலன்ஸ் என்பது இப்போதைக்கு நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை.
கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட்டை ஏன் படித்துப் பார்க்க வேண்டும்?
- அதிகாரப்பூர்வமற்ற அல்லது மோசடி சம்பந்தப்பட்ட டிரான்சாக்ஷன்களை தெரிந்து கொள்வதற்கு
- செலவுகளை கவனித்து, புத்திசாலித்தனமாக செலவு செய்வதற்கான ஒரு யுக்தியை உருவாக்குவதற்கு
- ஒரே கட்டணம் இரண்டு முறை மீண்டும் ஏற்பட்டிருக்கிறதா அல்லது பில்லிங் சம்பந்தப்பட்ட தவறுகளை தெரிந்துகொள்ள
- வட்டி விகிதம் மற்றும் தாமதமாக பேமென்ட் செலுத்தியதற்கான கட்டணங்கள் பற்றி அறிய
- உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பராமரிக்க
கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட்டை சிறந்த முறையில் நிர்வகிப்பதற்கான குறிப்புகள்:
- பேமென்ட் செலுத்துவதற்கு ஆட்டோ டெபிட் அல்லது ரிமைண்டர்களை அமைத்துக் கொள்ளவும்.
- உங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன் லிமிட்டில் 30 முதல் 40 சதவீதத்திற்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.
- எப்பொழுதும் குறைந்தபட்சம் மற்றும் மொத்த டியூ தொகையை ஒப்பிட்டுப் பார்க்கவும்.
- கூடுதல் கட்டணங்களை சரிபார்க்க மறக்க வேண்டாம்.
- ஒவ்வொரு மாதமும் எலக்ட்ரானிக் ஸ்டேட்மென்ட்டை டவுன்லோட் செய்து சரிபார்க்கவும்.
எனவே, உங்களுடைய கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட்டை வெறும் ஒரு பில்லாக மட்டும் பார்க்காமல், அதனை பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துங்கள். உங்களுடைய ஸ்டேட்மென்ட்டை கவனமாக படிப்பதன் மூலமாக கடனை தவிர்த்து, வலிமையான கிரெடிட் ஸ்கோரைப் பெற்று, சிறந்த பொருளாதார முடிவுகளை எடுக்கலாம்.
July 04, 2025 10:28 PM IST
கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட் பற்றி உங்களுக்குத் தெரியுமா…? நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய எல்லாமே இங்கே இருக்கு…!