ஆகையால், இவை இரண்டிற்கும் இடையே உள்ள முக்கியமான வித்தியாசங்களை ஒருவர் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலமாக கடன் பெறுநர்கள் தங்களுடைய தனிப்பட்ட பொருளாதார தேவைகள், கடனை திருப்பி செலுத்துவதற்கான திறன், நீண்ட கால இலக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் சரியான முடிவை எடுக்கலாம்.
ஓவர் டிராஃப்ட் என்பது கரண்ட் அல்லது சேவிங்ஸ் அக்கவுண்டோடு தொடர்புடைய ஒரு கடன் வசதி. இதன் மூலமாக அக்கவுண்ட் ஹோல்டர்கள் தாங்கள் வைத்திருக்கும் பணத்தைவிட அதிக அளவு பணத்தை வித்டிரா செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்த வசதி வாயிலாக நீங்கள் வித்டிரா செய்யும் பணத்தின் அளவு என்பது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு வரை இருக்கும். இந்த வசதியானது முதன்மையாக குறுகிய கால பொருளாதார இடைவெளிகளை நிரப்புவதன் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீளமான விண்ணப்ப செயல்முறை இல்லாமல் உடனடி பணத் தேவையை பூர்த்தி செய்வதற்கு இந்த ஓவர் டிராஃப்ட் வசதியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனைப் பொறுத்தவரை, நீங்கள் பயன்படுத்திய தொகைக்கு மட்டுமே வட்டி வசூலிக்கப்படும். அவசர தேவைகள் அல்லது எதிர்பாராத செலவுகளுக்கு இந்த அம்சம் ஏற்றதாக இருக்கும். தற்போது ஓவர் டிராஃப்ட் அம்சத்திற்கு ஒரு ஆண்டுக்கு 18 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.
மறுபுறம், பர்சனல் லோன் என்பது ஒரு பெரிய அளவிலான தொகையை உங்களுக்கு வழங்குகிறது. இதனை கடன் பெறுநர் இன்ஸ்டால்மெண்ட் அல்லது தவணை மூலமாக குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் ஒவ்வொரு மாதமும் திருப்பி செலுத்த வேண்டும். இந்த கடன்கள் வீட்டை புதுப்பிப்பது, திருமணம் அல்லது கடன்களை ஒருங்கிணைப்பது போன்ற திட்டமிடப்பட்ட செலவுகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
பர்சனல் லோன்கள் ஒரு ஆண்டுக்கு 8.75 சதவீதம் முதல் 24 சதவீதம் வரையிலான வட்டியை வசூலிக்கின்றன. மேலும், கடனை திருப்பி செலுத்துவதற்கு 7 வருடங்கள் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. வாழ்க்கை முறை அல்லது திட்டமிடப்பட்ட செலவுகளுக்கு பர்சனல் லோன்கள் வாங்குவதை முடிந்த அளவு தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவ ரீதியாக ஏற்படும் அவசர தேவைகளுக்கு மட்டுமே பர்சனல் லோன்களை ஒருவர் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும். நீங்கள் எதற்காக பர்சனல் லோன் வாங்குகிறீர்கள் என்ற காரணம் மிகவும் முக்கியமானது. எந்த ஒரு லோன் ப்ராடக்டாக இருந்தாலும் சரி, அதனை வாங்குவதற்கு முன்பு கடன் பெறுநர்கள் ஒரு முறைக்கு பலமுறை யோசிக்க வேண்டும். பர்சனல் லோன்களை பொறுத்தவரை எந்த ஒரு அடமானமும் தேவையில்லை. ஆனால், அதற்கான அங்கீகரிப்பு செயல்முறை என்பது சற்று நீளமானதாக இருக்கலாம். மேலும், ஒருவேளை நீங்கள் கடனை முன்கூட்டியே செலுத்த திட்டமிட்டு இருந்தால் அதற்கான கட்டணங்களையும் நீங்கள் செலுத்த வேண்டும்.
பர்சனல் லோன் vs ஓவர் டிராஃப்ட் வேறுபாடுகள்:
பர்சனல் லோன் – குறைவு (8.75 முதல் 24 சதவீதம்)
ஓவர் டிராஃப்ட் – அதிகம் (18 சதவீதம் முதல் 24 சதவீதம்)
பர்சனல் லோன் – நிர்ணயிக்கப்பட்ட மாதத் தவணை
ஓவர் டிராஃப்ட் – உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப
பர்சனல் லோன் – அதிகம் (பெரிய அளவிலான தொகை)
ஓவர் டிராஃப்ட் – குறைவு (அங்கீகரிக்கப்பட்ட உச்சவரம்பு வரை)
பர்சனல் லோன் – திட்டமிடப்பட்ட நீண்ட கால செலவுகள்
ஓவர் டிராஃப்ட் – குறுகிய கால தேவைகள்.
இந்த ஒப்பீடு என்பது ஒரு அடையாளத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் ஒவ்வொரு கடன் வழங்குநரைப் பொறுத்து மாறுபடலாம். எனவே, உங்களுடைய தேவைக்கு ஏற்ப விதிகள், வட்டி விகிதங்கள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய ஒரு கடன் ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
எனவே, ஓவர் டிராஃப்ட் மற்றும் பர்சனல் லோன் ஆகிய இரண்டில் எதைத் தேர்வு செய்ய வேண்டும் என்று வரும்போது அது குறிப்பிட்ட பொருளாதார தேவையைப் பொறுத்து அமையும். ஓவர் டிராஃப்ட் என்பது உடனடி குறுகிய கால பண தேவைகளுக்கும், பர்சனல் லோன்கள் பெரிய அளவிலான திட்டமிடப்பட்ட செலவுகளுக்கும் ஏற்றதாக இருக்கும்.
July 04, 2025 6:07 PM IST