50:30:20 விதியை மறந்துவிடாதீர்கள்: உங்கள் பணம் எங்கே போகிறது என்று தெரியவில்லையா? இந்த 50:30:20 விதி உங்களுக்கு உதவும். உங்கள் வருமானத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். தேவைகளுக்கு 50%: வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள், பில்கள், குழந்தைகளின் கல்வி போன்ற தவிர்க்க முடியாத செலவுகள். ஆசைகளுக்கு 30%: சினிமா, ஷாப்பிங், பயணம், ஹோட்டல் உணவு போன்ற உங்கள் விருப்பங்களுக்கு. சேமிப்புக்கு 20%: முதலீடுகள் அல்லது எதிர்கால இலக்குகளுக்கு இதைப் பயன்படுத்தவும்.