Last Updated:
திடீரென்று உங்களுக்கு பணத்தேவை ஏற்படும் போது என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் சமயத்தில் ஒருவேளை உங்களிடம் கார் இருந்தால் அந்த காரை விற்காமல் அதனை அடமானமாக காட்டி உங்களால் லோன் பெற முடியும்.
ஆக்சிஸ் வங்கி, IDFC ஃபர்ஸ்ட் பேங்க், HDFC வங்கி, ICICI வங்கி, AU ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் பல போன்ற வங்கிகள் மற்றும் NBFCகள் 10 முதல் 12 வருடம் பழமையான வாகனங்களுக்கு காரின் 200 சதவீத மதிப்புக்கு லோன்களை வழங்குகின்றன. உதாரணமாக, உங்களுடைய காரின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் என்றால் உங்களால் வங்கியில் இருந்து 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும்.
இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், ஒரு தங்க நகையை கொடுத்து நீங்கள் வாங்கும் கடனில் நகையை வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் காரைப் பொறுத்த அளவு அப்படி கிடையாது. கடனை நீங்கள் திருப்பி செலுத்தும் கால அவகாசம் முழுவதிலும் காரை உங்களால் பயன்படுத்த முடியும். ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் வழிமுறைகள் மற்றும் தனிப்பட்ட வங்கியின் விதிகளை பொறுத்து இந்த கடனுக்கான அங்கீகரிப்பு செயல்முறை நடைபெறும். பொதுவாக இந்த கார் லோன் என்பது தனிப்பட்ட ஆவண சரிபார்ப்பு, கடன் சுயவிவரம் மதிப்பீடு, அபாய மதிப்பீடு, வங்கியின் பாலிசிகள் மற்றும் கார் மதிப்பீடு போன்ற காரணிகளின் அடிப்படையில் வழங்கப்படும்.
நீங்கள் அடமானமாக காட்டப் போகும் காரை வாங்குவதற்கான கடனை நீங்கள் செலுத்தாமல் இருந்தால் கூட இந்த மாதிரியான லோன்களை உங்களால் பெற முடியும். அதற்கு நீங்கள் குறைந்தபட்சம் 12 மாத தெளிவான பேமெண்ட் ரெக்கார்டை கொண்டு இருக்க வேண்டும். வாகனங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதங்கள் என்பது 11% முதல் 18% வரை இருக்கலாம். மேலும் குறைவான கிரெடிட் ஸ்கோர் மற்றும் பழைய கார் போன்றவை அதிக அபாயம் கொண்ட கடனின் கீழ் வருவதால் அவர்களுக்கு அதிக வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படும். பர்சனல் லோனை விட இந்த வாகன கடனுக்கான வட்டி விகிதம் என்பது குறைவானதாக இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
வாகனங்கள் மீது நீங்கள் எடுக்கும் கடன்களுக்கான பிராசசிங் கட்டணம் என்பது தனிப்பட்ட கடன் வழங்குனர் பொறுத்து அமையும். உதாரணமாக, பஜாஜ் ஃபின்செர்வ் மற்றும் ஆக்ஸிஸ் வங்கி 1% வசூல் செய்கின்றனர். அதேசமயம், டாட்டா கேப்பிட்டல் 1.25% வசூல் செய்கின்றனர், HDFC வங்கி ஆனது 3000 ரூபாய் முதல் 9000 ரூபாய் வரை கட்டணத்தை வசூல் செய்கிறது. மேலும் AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 1 சதவீதத்தில் இருந்து 1.5 சதவீதம் வரை வசூல் செய்கிறது. மேலும் இது மாதிரியான கடன்களுக்கான ப்ரீ பேமெண்ட்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும். இது முதல் தொகையில் 3 சதவீதத்திலிருந்து 6 சதவீதம் வரை வசூலிக்கப்படும்.
ஒரு கார் மீது நீங்கள் கடன் வாங்கும் போது அதற்கான வட்டி விகிதம், பிராசசிங் கட்டணங்கள், ப்ரீபேமெண்ட் கட்டணங்கள், EMI தொகை மற்றும் டியூ தேதி போன்ற விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் கடனை முழுமையாக திருப்பி செலுத்தும் வரை உங்களால் காரை விற்க முடியாது.
ஆனால் ஒருவேளை இந்த கடனை திருப்பி செலுத்துவதில் நீங்கள் தாமதிக்கும் போது அதனால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். எதிர்காலத்தில் அதிக வட்டி விகிதங்களில் உங்களுக்கு கடன்கள் வழங்கப்படும். 30-, 60-, 90- நாள் போன்ற இடைவெளிகளில் பேமெண்ட்களை தாமதமாக செலுத்துவதற்கு நிறுவனங்கள் அவற்றுக்குரிய சொந்த பாலிசிகளை வைத்துள்ளனர். எனினும் 90 நாட்களுக்கு மேல் பேமெண்ட் செலுத்தாமல் இருந்தால் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் கடன் பெற்றவரிடம் இருந்து வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
July 04, 2025 8:33 AM IST
இனி பண பிரச்சனை வந்தால் கவலை இல்லை.. காரை வைத்து ஈஸியாக லோன் பெறலாம்.. எப்படி தெரிஞ்சுக்கோங்க!