மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதால் இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்
இந்த விபத்து இன்று அதிகாலை காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரை வீதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 17 வயதுடைய முஹம்மத் என்ற இளைஞர் பலியாகியுள்ளார்.
மிக அதிக வேகமாக செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியுள்ளது.
படுகாயமடைந்த இவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது சடலம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.