Last Updated:
மற்ற நெட்வொர்க்குகளில் இருந்து ஜியோவுக்கு மாறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தொலைத் தொடர்பு துறையில் ஜியோ நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே மாதத்தில் மட்டும் 27 லட்சம்பேர் அதிகரித்துள்ளதாக பிரபல ஜெஃப்பெரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெலிகாம் துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் மாறியுள்ளது. போட்டி நிறுவனங்களை விடவும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா, வாய்ஸ்கால் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை வழங்குகிறது ஜியோ. இதனால் மற்ற நெட்வொர்க்குகளில் இருந்து ஜியோவுக்கு மாறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த மே 2025 மாதத்தில் மட்டும் ஜியோ 27 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 12 மாதங்களில், ஜியோவின் ஆக்டிவாக உள்ள சந்தாதாரர் சந்தைப் பங்கு 150 அடிப்படை புள்ளிகள் (bps) அதிகரித்து 53 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த அதிகரிப்பு ஒட்டுமொத்த அளவில் டெலிகாம் கட்டணங்களுக்கு நல்லது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் ஏப்ரல் மாதம் சிறிய அளவில் சரிவு ஏற்பட்டது.
இதன்பின்னர் மே மாதத்தில் அதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்தது. இது கடந்த 29 மாதங்களில் இல்லாத அதிகரிப்பாகும் என பிரபல ஆய்வு நிறுவனமான ஜெஃப்பெரிஸ் கூறியுள்ளது.
ஜியோவின் ஒட்டுமொத்த சந்தாதாரர் தளம் மே 2025 இல் 2.7 மில்லியன் அதிகரித்துள்ளது. அதன் செயலில் உள்ள சந்தாதாரர் தளம் இன்னும் கணிசமாக, 5.5 மில்லியன் அதிகரித்துள்ளது.
ஜியோவின் நகர்ப்புற சந்தாதாரர்கள் மாதந்தோறும் 1.3 மில்லியன் அதிகரிப்பும் காணப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்திய டெலிகாம் துறை மட்டத்தில், செயலில் உள்ள சந்தாதாரர்கள் மே மாதத்தில் 7.3 மில்லியன் அதிகரித்து, மொத்தம் 108 கோடி சந்தாதாரர்களாக உள்ளனர்.
இந்த வளர்ச்சியில் முதன்மையாக ஜியோ முன்னணியில் இருந்தத. ஜியோ 5.5 மில்லியன் ஆக்டிவ் சந்தாதாரர்களை இணைத்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் 1.3 மில்லியன் சேர்த்துள்ளது.
July 03, 2025 4:24 PM IST