நீங்கள் தவறவிட்ட உங்கள் ஆதார் கார்டு விவரங்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் என எளிதாக மீட்டெடுக்கலாம். அதை எப்படி செய்வது என்பது பற்றி இங்கே பார்க்கலாம். UIDAI-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் “Retrieve UID/EID” என்ற ஆப்ஷனைப் பயன்படுத்தி உங்கள் ஆதார் எண் அல்லது என்ரோல்மென்ட் ஐடியை (EID) ஆன்லைனில் எளிதாக மீட்டெடுக்கலாம். இருப்பினும், உங்கள் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆதார் எண் (UID) அல்லது என்ரோல்மென்ட் ஐடியை (EID) மீட்டெடுக்க வேண்டுமா என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம்.
ஆதாரில் கொடுத்துள்ளபடி உங்கள் முழு பெயர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது இமெயில் மற்றும் கேப்ட்சா கோட் போன்றவற்றை என்டர் செய்ய வேண்டும். பின் மொபைல் எண் / இ-மெயிலுக்கு அனுப்பப்படும் OTP மூலம் நீங்கள் விவரங்களை அங்கீகரிக்க முடியும். வெற்றிகரமான வெரிஃபிகேஷனுக்குப் பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு உங்களின் ஆதார் எண் அல்லது EID எண் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். மேலும், இந்த சேவை இலவசம் ஆகும். ஒருவேளை உங்கள் மொபைல் எண், உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்றால், நீங்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
1. ஆதார் என்ரோல்மென்ட் சென்டருக்கு செல்லுங்கள்.
ஏதேனும் ஆதார் என்ரோல்மென்ட்/அப்டேட் சென்டருக்கு சென்று உங்களின் பெயர், பாலினம், மாவட்டம் அல்லது பின்கோடு மற்றும் பிற அறியப்பட்ட விவரங்கள் உள்ளிட்ட உங்கள் விவரங்களை அங்கிருக்கும் அதிகாரிகளிடம் வழங்கவும். இதன் பிறகு, உங்கள் பயோமெட்ரிக் அங்கீகாரம் (கைரேகை அல்லது கருவிழி ஸ்கேன்) எடுத்துக் கொள்ளப்படும். இந்த படி சரியாக முடிந்ததும், ஆபரேட்டர் உங்கள் இ-ஆதார் லெட்டரை பிரிண்ட் செய்வார். இதற்கு பெயரளவு கட்டணம் ரூ.30 வசூலிக்கப்படலாம்.
மற்றொரு வழி 1947 என்ற UIDAI ஹெல்ப்லைன் எண்ணுக்கு கால் செய்யலாம். இந்த எண்ணை டயல் செய்து உங்கள் விவரங்களை உரிய நிர்வாகியிடம் பேசி வழங்கலாம். நீங்கள் சொல்லும் விவரங்கள் பொருந்தினால், நிர்வாகி உங்கள் EID எண்ணை உங்களிடம் பகிர்வார்.
பின்னர் மீண்டும் 1947 என்ற எண்ணை அழைத்து, IVRS சிஸ்டமை பயன்படுத்தவும். இதற்குப் பிறகு ரெக்வஸ்ட் ஸ்டேட்டஸ் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து EID, DOB மற்றும் PIN கோடை வழங்கவும். விவரங்கள் பொருந்தினால், உங்கள் ஆதார் எண் உங்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும், இது ஒரு இலவச சேவை ஆகும்.
உங்கள் ஆதார் லெட்டரை நீங்கள் தொலைத்துவிட்டால், நீங்கள் ஒரு ஆதார் என்ரோல்மென்ட் சென்டருக்கு செல்ல வேண்டும். அங்கு சென்றதும், உங்கள் ஆதார் எண் அல்லது 28 டிஜிட் EID எண்ணை வழங்கவும். இதன் பிறகு, உங்கள் பயோமெட்ரிக் வெரிஃபிகேஷன் செய்யப்பட்டு, உங்கள் இ-ஆதாரின் பிரிண்ட்-அவுட் வழங்கப்படும். இதற்கு ரூ.30 கட்டணம் செலுத்தும்படி இருக்கலாம்.
July 03, 2025 4:36 PM IST