Last Updated:
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவிக்காவிட்டால் பேட்டிங் வரிசையை பலப்படுத்தலாம்
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்நிலையில் இந்திய அணியில் 3 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. கடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடிய சாய் சுதர்சன், ஜஸ்பிரீத் பும்ரா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியதாவது- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. இது இந்தியாவுக்கு சாதகமாக அமையும்.
இந்திய அணியால் அதிக ரன்கள் குவிக்க முடியும் என நம்புகிறேன். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவிக்காவிட்டால் பேட்டிங் வரிசையை பலப்படுத்தலாம். ஆனால் முதல் டெஸ்டில் பேட்ஸ்மேன்கள் 830 ரன்கள் வரை குவித்துள்ளார்கள்.
டெஸ்டில் இது மிகப்பெரிய ஸ்கோர் ஆகும். எனவே நாம் கவனம் செலுத்த வேண்டியது பவுலிங் டிபார்ட்மென்ட்டில் தான் தவிர பேட்டிங்கில் அல்ல என்று கூறியுள்ளார்.
July 03, 2025 2:30 PM IST