Last Updated:
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பு அமைச்சரவையில் மாற்றம் செய்ய பாஜக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
பாஜக தேசிய தலைவர்களை கட்சி தலைமை மாற்றம் செய்து வரும் நிலையில், அமைச்சரவையிலும் சில மாற்றங்களைக் கொண்டு வர தேசிய ஜனநாயக கூட்டணி திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பு அமைச்சரவையில் மாற்றம் செய்து, சில அமைச்சர்களுக்கு தேர்தல் ரீதியான பொறுப்பு வழங்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதன்படி மத்திய அமைச்சர்களான தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், அர்ஜுன் ராம் மேக்வால், பிரகலாத் ஜோஷி, கிஷன் ரெட்டி ஆகியோர் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோன்று, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஹரியானாவைச் சேர்ந்த டாக்டர் சுதா யாதவ் உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
July 03, 2025 12:42 PM IST