Last Updated:
தமிழ்நாடு சிட்கோ மூலம் உருவாக்கப்பட்டுள்ள 102 தொழிற்கூடங்களை உள்ளடக்கிய அடுக்குமாடி தொழில் வளாகம். வெள்ளித் தொழிலாளர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
சேலம் மாவட்டத்தில் வெள்ளி கொலுசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிற்முனைவோர்கள் வெள்ளி கொலுசு உற்பத்தி வளாக தொழிற்கூடங்களை ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சேலம் மாவட்டம், சேலம் மேற்கு வட்டம், அரியாகவுண்டன்பட்டியில் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்களுக்காக உடனடியாக தொழில் துவங்குவதற்கு தேவையான வசதிகளுடன் 102 தொழிற்கூடங்களை உள்ளடக்கிய அடுக்குமாடி தொழில் வளாகம் தமிழ்நாடு சிட்கோ மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வடுக்குமாடி தொழில் வளாகத்தில் உள்ள தொழிற்கூடங்கள் வெள்ளி கொலுசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்களுக்கு முழு கிரைய விற்பனை முறை மற்றும் தவணை முறை விற்பனை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதற்கு தயாராக உள்ளது.
எனவே, வெள்ளி கொலுசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிற்முனைவோர்கள் வெள்ளி கொலுசு உற்பத்தி வளாக தொழிற்கூடங்களை ஒதுக்கீடு பெற விரும்புவோர் http://www.tansidcotn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும் இது தொடர்பாக விவரங்களை அறிந்துகொள்ள கிளை மேலாளர் சத்தியமூர்த்தி அவர்களை சிட்கோ கிளை அலுவலகம், சிட்கோ தொழிற்பேட்டை, 5 ரோடு, சேலம் 636 004 என்ற முகவரியிலும், 94450 06571 என்ற எண்ணிலும், hmslm@tansidcoorg என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
Salem,Salem,Tamil Nadu
July 03, 2025 11:48 AM IST