Last Updated:
கடந்த மாதம் 12ஆம் தேதி மதியம், அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் விமானம் புறப்பட்டது. அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மருத்துவ மாணவர் விடுதியின் மீது விமானம் மோதியது.
அகமதாபாத் விமான விபத்து சம்பவம் தொடர்பாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் இங்கிலாந்து குடும்பங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தயாராகி வருவதாக அறியப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், ஏர் இந்தியா மற்றும் போயிங் நிறுவனங்களுக்கு எதிராக இழப்பீடு கோரி இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த மாதம் 12ஆம் தேதி மதியம், அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் விமானம் புறப்பட்டது. அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மருத்துவ மாணவர் விடுதியின் மீது விமானம் மோதியது. விபத்து நடந்த நேரத்தில் விமானத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். மீதமுள்ள 241 பேரும், மருத்துவ மாணவர் விடுதியில் 34 பேரும் உயிரிழந்துள்ளனர், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த பயணிகளில் 181 பேர் இந்தியர்கள் என்றும், 52 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், ஏர் இந்தியா மற்றும் போயிங் நிறுவனங்களுக்கு எதிராக இழப்பீடு கோரி இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சட்ட நிறுவனமான கீஸ்டோன் லாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இழப்பீட்டை அதிகரிக்கக் கோரி வழக்கு தொடரப்படும் என்று தெரிகிறது. இந்த செய்திக்கு பதிலளித்த கீஸ்டோன் சட்ட நிறுவனமும், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தங்களைத் தொடர்பு கொண்டதாகவும், இந்த விஷயத்தில் விவாதங்கள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளது.
விபத்துக்குப் பிறகு, ஏர் இந்தியாவை இயக்கும் டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும். மேலும், விமானம் விழுந்த இடத்தில் காயமடைந்தவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்படும் எனவும், விமானம் விழுந்து நொறுங்கிய பிஜே மருத்துவக் கல்லூரியின் விடுதியும் புதிதாக கட்டித் தரப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க நீதிமன்றங்களில் போயிங் நிறுவனத்திற்கு எதிராகவும், லண்டன் உயர்நீதிமன்றத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கலாமா, வேண்டாமா என்பதை நாங்கள் கவனமாக ஆராய்ந்து வருவதாக கூறியதாக கீஸ்டோன் லா நிறுவனத்தின் பங்குதாரரான ஜேம்ஸ் ஹீலிப்ராட் தெரிவித்துள்ளார். இந்த வாரம் பல கூட்டங்கள் நடத்தப்படும் என்றும், அதன் பிறகு இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
July 02, 2025 6:36 PM IST
அகமதாபாத் விமான விபத்து… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஏர் இந்தியா மீது வழக்குத் தொடர முடிவு…?