யுகேஜி ஒர்க்ஃபோர்ஸ் இன்ஸ்டிடியூட் (UKG Workforce Institute) சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் கிட்டத்தட்ட 78% பணியாளர்கள் தங்கள் வேலைகளில் ஏதோவொரு வகையில் விரக்தியை அனுபவிக்கின்றனர். இது அவர்களுக்கு உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான சோர்வு ஏற்பட வழிவகுக்கிறது. UKG Workforce Institute நடத்தி இருக்கும் புதிய உலகளாவிய ஆய்வின்படி, பணியாளர்களின் உற்பத்தித்திறன் மற்றும் ஈடுபாட்டின் மீது மேலாளர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். அதே நேரம் சர்வதேச அளவில் மற்றவர்களை விட பணியிடத்தில் மேலாளர்கள் அதிக அளவு வேலை விரக்தி இருப்பதாக கூறி இருக்கிறார்கள். இது தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் மேலாளர்களுக்கு நிறுவனம் கூடுதல் ஆதரவை வழங்க வேண்டும் என்பற்கான முக்கிய தேவையை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
இந்தியாவை பொறுத்த வரை 4 ஊழியர்களில் மூவர் (சுமார் 72% ஊழியர்கள்) தங்கள் மேனேஜர் தரும் ஆதரவு, ஊக்கம் மற்றும் தலைமைத்துவம் பணியிடத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்ல தூண்டுவதாக குறிப்பிட்டிருக்கின்றனர். அதே போல ஐந்தில் இரண்டு பங்கு ஊழியர்கள் (சுமார் 40% பேர்) தங்களுக்கு நல்ல மேனேஜர் கிடைத்திருப்பதாக கூறி இருக்கிறார்கள்.
ஆய்வில் கிடைத்த சில முக்கிய விவரங்கள்:
– 91% பணியாளர்கள் மேனேஜர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்த மற்றும் தெளிவான செயல்திறன் இலக்குகளை உருவாக்க உதவும் வகையில் கருத்துக்களை வழங்குவதாக ஒப்பு கொண்டுள்ளனர்.
– 88% ஊழியர்கள் மேனேஜர் தங்களின் மாறுபட்ட கண்ணோட்டங்களுக்கு மதிப்பளிப்பதாக கூறி இருக்கிறார்கள்.
– 86% ஊழியர்கள் தங்கள் வேலையை செய்ய தங்கள் மேனேஜர்களால் அதிகாரம் பெற்றுள்ளதை உணர்வதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
– நாட்டில் உள்ள சுமார் 89% பணியாளர்கள் பணியிடத்தில் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வேலையில் ஏற்படும் கூடுதல் பொறுப்பால் மிகவும் மோட்டிவேட்டட்டாக இருப்பதாகவும், 84% ஊழியர்கள் மேனேஜர்கள் அவர்கள் மீது அக்கறையுடன் இருப்பதாக நம்புவதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
– 64% இந்திய பணியாளர்கள் பணிச்சுமை குறைப்புக்கு ஏற்றவாறு ஊதியம் குறைக்கப்பட்டால் அதை ஏற்று கொள்வார்கள் என்று UKG Workforce Institute-ன் இந்த புதிய உலகளாவிய ஆய்வு தெரிவிக்கிறது. இதன் மூலம் பெரும்பாலான பணியாளர்கள் ஊதியத்தை விட ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதற்கு முன்னுரிமை அளிக்கத் தயாராக உள்ளதை இது காட்டுகிறது.
– இந்திய ஊழியர்களில் 87% பேர் தங்கள் மேனேஜர்கள் டீமிற்குள் ஏற்படும் மோதல்களை தீர்ப்பதில் திறம்பட செயல்படுகிறார்கள் என கருதுவதும் இந்த ஆய்வில் பிரதிபலித்துள்ளது. மேலும் ஆய்வில் தெரியவந்துள்ளபடி, இந்தியாவைச் சேர்ந்த சுமார் 76% பணியாளர்கள் தங்கள் பணியானது வெறும் ‘வேலை’ என்பதை விட அதிகம் என நம்புகின்றனர்.
இதையும் படிங்க:
இன்ஸ்டா காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 34 வயது பெண்..
– 91% பணியாளர்கள் தங்கள் மேனேஜர்கள் தங்களின் செயல்திறனை மேம்படுத்த, தெளிவான செயல்திறன் நோக்கங்களை நோக்கி ஒன்றாக செல்ல ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்குவதையும் அறிக்கை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் தங்கள் பங்கு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்துகொள்ள உதவுவதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட ஆய்வின் இந்தியாவிற்கான கண்டுபிடிப்புகள்..
– சுமார் 80% ஊழியர்கள் வேலை பார்க்கும் நிறுவனம் தங்கள் தொழில் வளர்ச்சிக்கான கற்றல் மற்றும் மேம்படுத்தி கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்குவதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
– இறுதியில் கிடைக்கும் முடிவுகளைப் பொருட்படுத்தாமல், புதிய வழிகளில் விஷயங்களை முயற்சிக்கும் ஊழியர்களை தங்கள் நிறுவனம் பாராட்டி ஊக்கப்படுத்துவதாக 75% பேர் குறிப்பிட்டுள்ளனர்.
– 68% பணியாளர்கள் தங்கள் பணியிடங்கள் பன்முகத்தன்மையை ஏற்று கொள்வதையும் இன்க்ளுஸிவ் கல்ச்சரை (inclusive culture) உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது என்பதையும் ஒப்பு கொண்டிருக்கிறார்கள்.
– இந்தியாவில் சுமார் 94% மேனேஜர்கள் தங்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே போல சுமார் 88% மேனேஜர்கள் தங்கள் ஊழியர்களின் தொழில்துறை மீதான ஆசைகளை தீவிரமாக ஆதரித்து, அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிப்பதையும் ஆய்வு வெளிப்படுத்துகிறது.
UKG, India,-வை சேர்ந்த சுமீத் தோஷி கூறுகையில், உலகெங்கிலும் உள்ள பணியிடங்களில் நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் கலாச்சாரம்தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இதற்கு நிறுவனங்களில் பணியாற்றும் மேனேஜர்கள் முக்கிய உந்து சக்தியாக உள்ளனர் என கூறினார். இதனிடையே UKG, India-வை சேர்ந்த மனித வளத்துறை இயக்குனர் நிதின் வாத்வா பேசுகையில், சமீப காலமாக Employee Resource Groups தீவிரமாகி செயல்படுவதாகவும் ஊழியர்களுக்கு ஆதரவான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வியக்கத்தக்க வகையில் நாட்டில் உள்ள சுமார் 89% பணியாளர்கள் சவால்களும், பணியில் கூடுதல் பொறுப்பும் தங்களை மிகவும் ஊக்குவிப்பதாக கூறுவது, தற்போதைய காலகட்டத்தில் தொழிலாளர்களிடம் இருக்கும் போட்டி மனப்பான்மையின் தொடர்ச்சியாக இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…