Last Updated:
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஆறு மாத சிறை தண்டனை விதித்துள்ளது.
வங்கதேசத்தின் பிரதமராகவும், அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தவர் ஷேக் ஹசீனா. இவரது ஆட்சிக்கு எதிராக கடந்த ஆண்டு வங்கதேசத்தில் மிகப்பெரிய அளவில் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இதனால் அங்கு அவரது ஆட்சி கவிழ்ந்து, தனது பிரதமர் பதவியையும் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார்.
மேலும், அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டதன் காரணமாகவும், ஷேக் ஹசீனாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாகவும் அவர், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு அவர் தப்பிவந்தார். இதனைத் தொடர்ந்து முகமது யூனிஸ் பிரதமராக பொறுப்பேற்று வங்காளதேசத்தில் புதிய அரசு அமைந்தது.
புதிய அரசு பொறுப்பேற்றதும், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி, அவாமி கட்சியின் மாணவர் அமைப்புக்கு கடந்த ஆண்டு வங்கதேச அரசு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து, அவாமி கட்சிக்கும் ஒட்டுமொத்தமாக தடை விதித்து வங்கதேச அரசு உத்தரவிட்டது. மேலும், ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வங்கதேசம் பிடிவாரண்டை பிறப்பித்து, அவரை இந்தியாவில் இருந்து மீண்டும் வங்கதேசத்திற்கு நாடு கடத்த முடிவு செய்தது.
இந்தியாவில் ஷேக் ஹசீனாவுக்கு விசா நீட்டிப்பு வழங்கியதால் அவர் தொடர்ந்து இங்கு இருந்துவருகிறார். இந்நிலையில், ஷேக் ஹசீனா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
July 02, 2025 4:14 PM IST
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாதம் சிறை! – சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவு