சிங்கப்பூரில் இருந்து தஞ்சாவூர் வந்த ஊழியர், ஊருக்கு வந்து சில மணி நேரத்திலேயே ப*லியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் 27 வயதுமிக்க கவுதமன்.
இவர் சிங்கப்பூரில் வேலைபார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 23 வயதில் சுபஸ்ரீ என்ற மனைவியும் உள்ளார்.
விடுமுறையை கழிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து கடந்த ஜூன் 30 ஆம் தேதி இரவு 7 மணிவாக்கில் சொந்த ஊர் வந்துள்ளார் கவுதமன்.
வந்தவுடன், டீ கடை நடத்தி வரும் தன் தந்தை ரவிச்சந்திரனை பார்க்க வேண்டும் என்பதற்காக அருகில் உள்ள இரண்டாம் புலிக்காடு என்ற கிராமத்துக்கு பைக்கில் சென்றுள்ளார்.
இரவு 9 மணியளவில் பட்டுக்கோட்டை நோக்கி சென்ற லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து, நிற்காமல் சென்ற லாரியை அப்பகுதி மக்கள் சுமார் 3 கிலோமீட்டர் துரத்தி பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்து வெறும் 2 மணி நேரத்தில் கவுதமன் உயிரிழந்தது அப்பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஊழியர்; தமிழ்நாட்டில் உள்ள அவரின் வீட்டில் நடந்த கொடூரம் – உஷார்
திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் செய்யவிருந்த ஆடவர் விமான நிலையத்தில் கைது