ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அதன் ரெப்போ விகிதத்தை 6 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைப்பதாக எடுத்த முடிவைத் தொடர்ந்து, அடுத்த 2 வாரங்களில் HDFC வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC வங்கி, தொடர்ந்து ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை குறைத்திருப்பது பிற கடன் வழங்குநர்கள் மற்றும் ஃபிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்களை பாதிக்கலாம் என்று கருதப்படுகிறது.
குறிப்பிட்ட கால அளவுகள் கொண்ட ஃபிக்சட் டெபாசிட்கள்:
15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவான கால அளவுகள் கொண்ட ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை HDFC வங்கி மாற்றி அமைத்துள்ளது. முன்னதாக இந்த திட்டத்தில் பொதுவான கஸ்டமர்களுக்கு 6.60 சதவீதமும், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.10 சதவீத வட்டி விகிதமும் வழங்கப்பட்டது. இந்த வட்டி விகித குறைப்புக்குப் பிறகு வழக்கமான கஸ்டமர்களுக்கு 6.35% ஆகவும், சீனியர் சிட்டிசன்களுக்கு 6.85 சதவீதமாகவும் வட்டி விகிதம் குறைந்துள்ளது.
மேலும், 3 கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட்களுக்கு HDFC வங்கி தற்போது பொதுவான சிட்டிசன்களுக்கு 2.75% முதல் 6.60% வட்டி விகிதத்தை வழங்கி வருகிறது. மேலும், சீனியர் சிட்டிசன்களுக்கு 3.25% முதல் 7.10 சதவீதம் வரை வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கால அளவைப் பொறுத்து மாறுபடும்.
முன்னதாக FD தொகையை வித்டிரா செய்வதற்கான அபராதம்:
ஒருவேளை FD அக்கவுண்ட் மெச்சூரிட்டி ஆவதற்கு முன்பே பணத்தை வித்டிரா செய்ய நினைத்தால் HDFC வங்கி உங்களிடமிருந்து அபராதத்தை வசூலிக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். வங்கியின் விதிகளின்படி, உங்களுடைய பணம் FD அக்கவுண்டில் இருந்ததற்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வட்டியைவிட ஒரு சதவீதம் குறைவாக வழங்கப்படும். எனவே, நீங்கள் பணத்தை முன்கூட்டியே வித்டிரா செய்தால் குறைவான ரிட்டன்களைப் பெறுவீர்கள்.
ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை குறைத்ததோடு மட்டுமல்லாமல் HDFC வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதங்களையும் குறைத்துள்ளது. ஜூன் 24, 2025 முதல் அமலான இந்த மாற்றத்தின்படி, சேமிப்பு கணக்குகளுக்கு 25 பேசிஸ் புள்ளிகள் குறைந்து, வட்டி விகிதமானது ஒரு ஆண்டுக்கு 2.75 சதவீதத்திலிருந்து 2.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் தினமும் கணக்கிடப்பட்டு 3 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெக்கரிங் டெபாசிட் விகிதங்களில் மாற்றம் கிடையாது:
அதே சமயத்தில் HDFC வங்கியின் ரெக்கரிங் டெபாசிட் வட்டி விகிதங்களில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, பொதுவான கஸ்டமர்களுக்கு 4.25 முதல் 6.60 சதவீத வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 4.75% முதல் 7.10 சதவீதமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஜூன் 10, 2025 முதலில் இருந்து அமலானது.
July 02, 2025 12:43 PM IST
ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்த முக்கிய வங்கி… அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்…!