Last Updated:
முகமது ஷமி மீது குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல், வரதட்சணை கொடுமை, மேட்ச் பிக்ஸிங் என அடுக்கடுக்காக அவரது மனைவி ஹாசின் ஜஹான் குற்றஞ்சாட்டியதை தொடர்ந்து 2018-இல் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தனது முன்னாள் மனைவி மற்றும் மகளுக்கு மாதந்தோறும் 4 லட்சம் ரூபாய் வழங்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இந்திய அணியின் வெற்றிகரமான பவுலராக முகமது ஷமி இருந்து வருகிறார். கிரிக்கெட்டில் பல சாதனைகளை வெற்றிகளை குவிக்கும் ஷமியின் திருமண வாழ்க்கை சோகமாகவே அமைந்தது. முகமது ஷமி மற்றும் அவரது மனைவி ஹாசின் ஜஹானுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முகமது ஷமி மீது ஹாசின் ஜஹான் பல்வேறு புகார்களை தெரிவித்தார். வரதட்சணை கேட்டு ஷமி புண்படுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாக காவல்நிலையத்தில் பாலியல் மற்றும் குடும்ப துஷ்பிரயோக பிரிவுகளில் புகார் அளித்தார்.
இவர் மீது குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல், வரதட்சணை கொடுமை, மேட்ச் பிக்ஸிங் என அடுக்கடுக்காக அவரது மனைவி ஹாசின் ஜஹான் குற்றஞ்சாட்டியதை தொடர்ந்து 2018-இல் இருவரும் விவாகரத்து பெற்றனர். இதற்கிடையே தான் ஷமி தனது முன்னாள் மனைவிக்கு 50 ஆயிரம் ரூபாயும், மகளுக்கு 80 ஆயிரம் ரூபாயும் வழங்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது, முகமது ஷமி தனது முன்னாள் மனைவி ஹாசின் ஜஹானுக்கு ஒன்றரை லட்சம் ரூபாயும், மகளுக்கு இரண்டரை லட்சம் ரூபாயும் மாதந்தோறும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
July 02, 2025 9:15 AM IST