திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த பெண், சிங்கப்பூர் காதலனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி தன் கணவரை தீர்த்துக்கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி, நாயனசெருவு கிராமத்தை சேர்ந்தவர் விஜயன், இவரது மனைவி வெண்ணிலா, இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
பங்களாதேஷ் நாட்டவர் கைது: சாங்கி விமான நிலையத்தில் திருட்டு வேலை – வளைத்து பிடித்த போலீஸ்
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம், தன் கணவர் குடிபோதையில் மூச்சுத்திணறி இறந்துவிட்டார் என்று வெண்ணிலா ஒப்பாரி வைத்து ஊரை கூட்டியதாக சொல்லப்பட்டுள்ளது.
உறவினர்களுக்கு சந்தேகம்
வெண்ணிலாவின் நடத்தையில் உறவினர்களுக்கு சந்தேகம் வர, விஜயன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையிடம் அவர்கள் புகார் செய்தனர்.
கணவரை பறிகொடுத்து பிள்ளையுடன் பெண் இருப்பதை பார்த்த காவல்துறை அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சடலத்தை கூறாய்வு செய்ததில் அவர் மூச்சித்திணறி இறந்ததாக அறிக்கை கொடுக்கப்பட்டது. மேலும் அவர் மது அருந்திருந்ததும் உறுதி செய்யப்பட்டது. பின்னர் பிரேத உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கமும் செய்யப்பட்டது.
3 மாதங்கள் கண்காணித்த காவல்துறை
இந்நிலையில், கடந்த 3 மாதங்கள் காவல்துறை வெண்ணிலாவை தொடர்ந்து கண்காணித்து வந்தது, குறிப்பாக அவர் யாரிடம் பேசுகிறார் போன்றவற்றை அவர்கள் தீவீரமாக கண்காணித்துள்ளனர்.
அதில் சந்தேகம் வலுக்கும்படி, ஒரு எண்ணில் இருந்து அடிக்கடி அழைப்பு வந்துள்ளது. அந்த எண் அதே ஊரை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு சொந்தமானது என்றும் அவர் தற்போது சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
சிங்கப்பூர் சென்ற சஞ்சய்
இது குறித்து விசாரித்ததில் சஞ்சய்க்கும் வெண்ணிலாவுக்கு பேச்சுவார்த்தை இருந்துள்ளது, இது ஊர் மக்களுக்கு தெரியவர, சஞ்சய் சிங்கப்பூர் சென்றதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
விஜயன் இறந்த அன்றும் அதற்கு முன்னரும் அவர்கள் இருவரும் கைபேசி வாயிலாக பலமுறை பேசிக்கொண்டு இருந்தது தெரியவந்தது. இதை அடிப்படையாக கொண்டு காவல்துறை வெண்ணிலாவிடம் தீவீர விசாரணையை மேற்கொண்டனர்.
அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியானது, சஞ்சய் தூண்டுதலின்பேரில் கூலிப்படையை ஏவி தன் கணவரை வெண்ணிலா தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.
தினமும் குடித்துவிட்டு வீட்டில் உறங்குவதையே விஜயன் வேலையாக கொண்டு இருந்ததாகவும், இதனால் சஞ்சய் உடன் வெண்ணிலாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இடையூறாக இருந்த கணவர்
சஞ்சய் சிங்கப்பூர் சென்றாலும் இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர், இந்த கள்ள காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை போட்டுத்தள்ள இருவரும் சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.
அதற்கான சிங்கப்பூரில் இருந்தே விஜயன் ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது. சம்பவம் நடந்த தினம் விஜயன் வழக்கம் போல போதையில் படுத்துத்தூங்கி கொண்டிருக்கையில், சஞ்சய் ஏற்பாடு செய்த 4 பேர் அவரை தலையணை முகத்தில் வைத்து அமுக்கி கொ லை செய்துள்ளனர்.
பின்னர் இரவு முழுவதும் பிணத்துடன் இருந்த வெண்ணிலா விடிந்ததும் கூப்பாடு போட்டு ஒப்பாரி வைத்து நாடகமாடியதாக சொல்லப்படுகிறது.
5 பேர் கைது
இதனை அடுத்து, வெண்ணிலா, அழகிரி, சபரிவாசன், சக்திவேல் மற்றும் 16 வயது இளையர் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இதற்கு மூளையாக செயல்பட்ட சஞ்சய் சிங்கப்பூரில் உள்ள நிலையில் அவரை கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருவதாக சொன்னது.
தொடர்புடைய செய்திகள்…
சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஊழியர்; தமிழ்நாட்டில் உள்ள அவரின் வீட்டில் நடந்த கொடூரம் – உஷார்
திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் செய்யவிருந்த ஆடவர் விமான நிலையத்தில் கைது