காஷ்மீரில் உள்ள 3 தொகுதிகளிலும் மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், அதற்கான வேட்பாளர் பட்டியலை மெகபூபா முப்தி அறிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீரில் உள்ள மொத்தம் 5 மக்களவைத் தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி ஜம்முவின் உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி முதலில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்பிறகு ஜம்மு, அனந்த்நாக், ஸ்ரீநகர், பாரமுல்லா தொகுதிகளுக்கு அடுத்தடுத்து தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தொகுதி பங்கீட்டில் ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, காஷ்மீரில் உள்ள மூன்று தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். அதன்படி அனந்த்நாக் தொகுதியில் தான் போட்டியிடுவதாகவும், பாராமுல்லாவில் ஃபயாஸ் மிர் மற்றும் ஸ்ரீநகரில் வஹீத் பாரா களமிறங்குவதாகவும் தெரிவித்தார். இதில் அனந்த்நாக் தொகுதியில் குலாம் நபி ஆசாத்தை எதிர்த்து மெகபூபா முப்தி போட்டியிடுகிறார். ஜம்மு மற்றும் உதம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும் மெகபூபா தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…