திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த ரிதன்யா, ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த சவிதா, வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரைச் சேர்ந்த சரண்யா என கடந்த வாரத்தில் மட்டும் திருமணம் ஆகிய மூன்று இளம் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த விஷயங்களுக்காக தவறான முடிவெடுத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த ரிதன்யா, ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த சவிதா, வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரைச் சேர்ந்த சரண்யா என கடந்த வாரத்தில் மட்டும் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார்கள். வேலூர் சரண்யா வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூரை அடுத்த ஆசனாம்பட்டு கிராமத்தை சேர்ந்த 30 வயதாகும் ஆனந்தன் என்பவர் அதே பகுதியில் கணினி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். ஆனந்தனுக்கு சரண்யா என்ற பெண்ணுடன் (29) ஐந்து வருடம் முன்பு திருமணம் நடந்தது. ஆனந்தன் சரண்யா தம்பதிக்கு 3 வயதில் சஞ்சீவன் என்ற மகனும், 1 வயதில் தமிழ் யாழினி என்ற மகளும் உள்ளனர். ஆனந்தனுக்கு கடந்த ஜூன் 27ம் தேதி பிறந்தநாள் என்பதால் அவரது மனைவி குடும்பத்தாருடன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என கணவரை அழைத்தாராம்.
அதற்கு ஆனந்தன் ‘கம்ப்யூட்டர் சென்டரை’ திறந்து வைத்து விட்டு வருவதாக பதில் கூறியுள்ளார். இது தொடர்பாக இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த சரண்யா, திடீரென வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று தூக்கிட்டு உயிரையே விட்டுவிட்டார். தனது தாய் இருந்தகோலத்தை பார்த்த மகன் சஞ்சீவன் கால்களை பிடித்து அம்மா, அம்மா என கதறி அழுதான். அவனது கதறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்றபோது சரண்யா தூக்கில் தொங்கியதையும் 3 வயது மகன் அவரது கால்களை பிடித்து கதறியதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து சரண்யாவை தூக்கிலிருந்து மீட்டிருக்கிறார்கள்.
திருப்பூர் ரிதன்யா அடுத்ததாக திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்த தொழில் அதிபர் அண்ணாதுரை பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். அவருடைய மகள் ரிதன்யாவுக்கு 27 வயது ஆகிறது. இவருக்கும், கைகாட்டிபுதூர் ஜெயம்கார்டன் பகுதியை சேர்ந்த அரசியல் கட்சியைச் சேர்ந்த குடும்பமான ஈஸ்வரமூர்த்தி-சித்ரா தேவி தம்பதியின் மகன் கவின்குமார் (27) என்பவருக்கும் கடந்த இரண்டரை மாதத்திற்கு முன்பு கல்யாணம் நடந்தது.
திருமணத்தின் போது வரதட்சணையாக ரிதன்யா வீட்டில் 500 பவுன் நகை தருவதாக கூறி 300 பவுன் நகை போட்டார்களாம். ரூ.70 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் மற்றும் ரூ.2.5 கோடி செலவு செய்து மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்துள்ளனர். . ஆனால் இவ்வளவு செய்தும், ரிதன்யா சந்தோஷமாக வாழவில்லை. மாமனார் ஈஸ்வரமூர்த்தி (51), மாமியார் சித்ராதேவி (47) ஆகிய இருவரும் ரிதன்யாவிடம் மீதமுள்ள 200 பவுன் நகை இன்னும் தரவில்லை என்று கூறி டார்ச்சர் செய்தார்களாம். மேலும் வேலைக்கே செல்லாமல் வீட்டிலேயே இருந்தாலும் மாதம் பல லட்சம் வருமானம் வருகிறது என்பதால், கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரும் வீட்டில் தான் இருப்பார்களாம். அவர்கள் மூன்று பேரும் ரிதன்யாவை டார்ச்சர் செய்தார்களாம். இதனால் காரை எடுத்துக் கொண்டு வெளியில் சென்ற ரிதன்யா வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
ஈரோடு சவிதா ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டை சூடமுத்தான்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவர் கோனேரிப்பட்டி பிரிவு பகுதியில் ஹார்டுவேர் கடை வைத்து உள்ளார். இவருடைய மனைவி சவிதாவுக்கு 23 வயது ஆகிறது. இவர்களுக்கு திருமணமாகி 3.5 ஆண்டுகள் ஆகிறது. இரண்டரை வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கோபி அருகே கூகலூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டு வருவதாக சவிதா கூறி வந்ததாக தெரிகிறது. You May Also Like ஈரோடு அம்மாபேட்டை சவிதா.. தாய் வீட்டுக்கு போக ஆசைப்பட்டு.. கடைசியில் இப்படியா ஆகணும் இதனால் கணவன், மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதாம். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மீண்டும் தாய் வீட்டுக்கு சென்று விட்டு வருவதாக சவிதா, கிருஷ்ணனிடம் கூறி உள்ளார். ஆனால் அவர் மதியம் செல்லலாம் என கூறிவிட்டு கடைக்கு சென்றாராம் இதனால் சவிதா மனமுடைந்து வீட்டில் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
இப்படி அடுத்தடுத்து பெண்கள் தவறான முடிவெடுத்திருக்கிறார்கள்.
The post வாழ்க்கையில் அடுத்தடுத்து அவசரப்படும் பெண்கள்.. தற்கொலை! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.