திமுகவின் பொய் வாக்குறுதிகள்
எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு 525 அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றியதாக குற்றம்சாட்டினார். “பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாகவும், ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்குவதாகவும் திமுக கூறியது. ஆனால், இவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை,” என்று அவர் குறிப்பிட்டார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் நேர்மையாக மக்களை சந்திக்கவில்லை என்றும், பொய்யான வாக்குறுதிகளால் ஆட்சிக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.