Last Updated:
டிரம்ப், வர்த்தக ஒப்பந்தம் செய்யாத நாடுகளுக்கு 9ஆம் தேதிக்குப் பின்னர் கூடுதல் வரி விதிப்பார். இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகள் மீது வரும் 9ஆம் தேதிக்குப் பின்னர் கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக 2ஆம் முறையாக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், 57 நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரியை தாறுமாறாக அதிகரித்தார். இந்தியாவுக்கு 26% கனடாவுக்கு 25%, சீனாவுக்கு 125% என வரியை அறிவித்ததால் உலக பொருளாதார அரங்கில் இது பெரும் விவாதமானது.
சுமார் 3 மாதங்கள் இந்த வரிவிதிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான கெடு வரும் 9-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகள் மீது 9ஆம் தேதிக்குப் பின்னர் வரி விதிப்பு அமலாகும் என கூறியுள்ள டிரம்ப், குறிப்பிட்ட நாடுகளிடம் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும், இதுகுறித்து 8ஆம் தேதி அறிவிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தைகளை இறுதி செய்வதற்காக, வர்த்தகத் துறையின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்தியக்குழு வாஷிங்டனுக்கு சென்றுள்ளது.
June 30, 2025 1:03 PM IST
“பதிலுக்கு பதில் வரி – மேலும் காலஅவகாசம் வழங்கப்படாது” – அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்