சிறப்பு பாராளுமன்ற அமர்வு நாளை திங்கட்கிழமை (30) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு 44ஆம் இலக்க பொது நிதி மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 11 இன் படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அரசாங்கம் நிதி மூலோபாய அறிக்கையை அறிவிக்க வேண்டும் என்ற தேவையை நிறைவேற்றுவதற்காக, பாராளுமன்றம் இந்த முறையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 16இன் படி, பிரதமரின் வேண்டுகோளின் பேரில் சபாநாயகர் திங்கட்கிழமை (30) பாராளுமன்றத்தைக் கூட்டியுள்ளார்.
அதன்படி, இது தொடர்பாக அரசு கொண்டு வரும் ஒத்திவைப்பு விவாதம் நாளை மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.
மேலும், ஜூலை 8, 9 மற்றும் 11 ஆகிய திகதிகளில் பாராளுமன்றம் மீண்டும் கூடும் என்று பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.