Last Updated:
இந்திய அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளது. செப்டம்பரில் தொடங்கும் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை செப்டம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு இடையில் இந்தியாவின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானைச் சேர்ந்தவர் தலைவராக இருக்கும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் போட்டி என்பதால் அதில் இந்தியா பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக பிசிசிஐ உடன் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பங்கேற்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. முதல் போட்டியை செப்டம்பர் 10ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜூலை முதல் வாரத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு முழு அட்டவணையும் வெளியிடப்படும். இந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20 போட்டியாக நடத்தப்பட உள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
June 29, 2025 4:05 PM IST