தமிழ்நாடு-சிங்கப்பூர் இடையே பயணிப்போர் எண்ணிக்கை உச்சத்தை அடைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
கடந்த 2024 மற்றும் 2025 நிதியாண்டு மட்டும் தமிழ்நாடு – சிங்கப்பூருக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்து சுமார் 1.7 மில்லியன் என்று சொல்லப்பட்டுள்ளது.
இது தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் மொத்த பயணிகள் போக்குவரத்தில் 22 சதவீதம் ஆகும்.
மேலும் ஒட்டுமொத்த இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்வோர் எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்த்தால் அது 30 சதவீதமாக உள்ளது.
தற்போது, தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வாரத்திற்கு 98 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.
அதாவது நாள் ஒன்றுக்கு 14 விமான சேவைகள் அங்கு இயக்கப்படுவதாக திருச்சி விமான நிலைய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
சென்னை-சிங்கப்பூர்
இதில் தமிழ்நாட்டின் சென்னை விமான நிலையம் தான் அதிக பயணிகளை கையாண்டுள்ளது.
அதாவது சென்னை-சிங்கப்பூர் இடையே 9,41,679 பயணிகள் கடந்த நிதியாண்டில் பயணித்துள்ளனர்.
திருச்சி-சிங்கப்பூர்
இரண்டாவதாக, திருச்சி விமான நிலையம் உள்ளது.
திருச்சி- சிங்கப்பூர் இடையே 5,51,434 பயணிகள் கடந்த நிதியாண்டில் பயணித்துள்ளனர்.
கோவை மற்றும் மதுரை to சிங்கப்பூர்
அடுத்த அடுத்த இடங்களில் கோயம்புத்தூர் மற்றும் மதுரை உள்ளன.
கோவை- சிங்கப்பூர் இடையே 1,50,927 பயணிகளும், மதுரை-சிங்கப்பூர் இடையே கிட்டத்தட்ட 60,000 பயணிகள் பயணித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.