மேலும், இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தடுப்பூசி என்பது மக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த, மலிவான வழிகளில் ஒன்றாக உள்ளது. அந்த வகையில், பின்தங்கிய மக்களுக்கும் தடுப்பூசி சென்றடைய அரசு அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. சுகாதாரத் துறை மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள், நாடு முழுவதும் 1.3 கோடி தடுப்பூசி இயக்கங்களை நடத்துகின்றனா்.