Last Updated:
பராக் ஜெயின் ரா உளவுப்பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை 1 முதல் 2 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார். ரவி சின்ஹாவின் பதவிக்காலம் ஜூன் 30 முடிவடைகிறது.
ரா உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் ‘ரா’ உளவு அமைப்பின் தலைவராக பதவி வகித்து வரும் ரவி சின்ஹாவின் பதவிக்காலம் வருகிற 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் ‘ரா’ உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். ‘ரா’ உளவு அமைப்பின் தலைவராக ஜூலை 1ஆம் தேதி பதவியேற்கும் பராக் ஜெயின், அடுத்த 2 ஆண்டுகளுக்கு அந்த பதவியில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1989ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த பராக் ஜெயின், ரா உளவு அமைப்பில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். விமான ஆராய்ச்சி மையத்தின் தலைவராக இருக்கும் பராக் ஜெயின், ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் ராணுவ நகர்வுகளைக் கண்காணிக்கும் பொறுப்பில் பங்காற்றியவர். ஜம்மு காஷ்மீரிலும் கனடா, இலங்கை ஆகிய வெளிநாடுகளிலும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் உலகளாவிய உளவுத்துறை நடவடிக்கைகளில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
உலகின் சிறந்த உளவு அமைப்புகளின் பட்டியலில் ரா என்று அழைக்கப்படும் இந்திய அரசின் Research and analysis wing 3வது இடத்தில் உள்ளது. 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு பிரதமர் அலுவலகத்தை முகவரியாக கொண்டு செயல்படுகிறது. வெளிநாட்டு உறவு, தீவிரவாதம் ஆகியவற்றை கவனித்துக்கொள்வது ரா அமைப்பின் முதன்மை பணியாக இருக்கும் நிலையில், இந்திய அணுசக்தி பாதுகாப்புக்கான தனிப்பொறுப்பையும் ரா பெற்றுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
June 28, 2025 9:28 PM IST