சமீபத்திய டேட்டாவின்படி, அமெரிக்க ராணுவம் 2,127,500 வீரர்கள், 13,043 விமானங்கள் மற்றும் 4,640 டாங்கிகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக பெரிய விமானப்படை, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான ராணுவத் தளங்களைக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 80 நாடுகளில் 750-க்கும் மேற்பட்ட ராணுவத் தளங்களை அமெரிக்கா வைத்திருக்கிறது. ஜெர்மனியில் 100-க்கும் மேற்பட்ட ராணுவத் தளங்களும், ஜப்பானில் 120-க்கும் மேற்பட்ட ராணுவத் தளங்களும், தென் கொரியாவில் 73 ராணுவத் தளங்களும் உள்ளன. ஆனால், இந்தியாவில் அமெரிக்கா ஒரு ராணுவத் தளத்தைக் கூட கட்டமைக்கவில்லை. ஏன் தெரியுமா? இந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணம் என்ன?