சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி, கலந்துரையாடினார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘டிராகன்’ விண்கலத்தின் மூலம் 28 மணி நேர பயணத்துக்குப் பிறகு சா்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த வியாழக்கிழமை இந்தியாவின் சுபான்ஷு சுக்லா அடைந்தார்.