• Login
Tuesday, April 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குஜராத் இடைத்தேர்தல்… அபார வெற்றி பெற்ற ஆம் ஆத்மி வேட்பாளர்!

GenevaTimes by GenevaTimes
June 23, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
குஜராத் இடைத்தேர்தல்… அபார வெற்றி பெற்ற ஆம் ஆத்மி வேட்பாளர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 23, 2025 6:42 PM IST

ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், நான்கு இடங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. குஜராத்தில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்றுள்ளது.

News18News18
News18

குஜராத், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. அதில், ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் எதிர்க்கட்சிகளும், ஒரே ஒரு தொகுதியில் பாஜகவும் வென்றுள்ளது.

அதன்படி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிலாம்பூர் தொகுதியில் இடதுசாரி ஆதரவுடன் வெற்றி பெற்ற பி.வி.அன்வர், தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யதான் செளதக் சுமார் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மேற்கு வங்க மாநிலம் காளிகஞ்ச் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ நஸிருதீன் அகமது உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் அலிபா அகமது தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 49 ஆயிரத்து 755 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ குர்பிரீத் சிங் கோகி மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோரா 10 ஆயிரத்து 600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதில் குறிப்பாக குஜராத் மாநிலத்தில், காடி மற்றும் விஸாவதர் ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், காடி தொகுதி பாஜக எம்.எல்.ஏ கர்சான்பாய் சோலங்கி உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டிருந்தது. இதேபோன்று விஸாவதர் தொகுதியின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பயானி பூபேந்திரபாய், தனது பதவியை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இதில், குஜராத் காடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜேந்தர் குமார் 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அதேசமயம், விஸாவதர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் இட்டாலியா கோபால், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கீர்த்தி படேலை 17,554 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 23, 2025 6:42 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || ”அவர் GMOA உறுப்பினர் அல்ல”

Next Post

ஸ்விகி சொமேட்டோவில் இனி டெலிவரி இல்லை… ஹோட்டல் உரிமையாளர் சங்கம் அதிரடி அறிவிப்பு..

Next Post
ஸ்விகி சொமேட்டோவில் இனி டெலிவரி இல்லை… ஹோட்டல் உரிமையாளர் சங்கம் அதிரடி அறிவிப்பு..

ஸ்விகி சொமேட்டோவில் இனி டெலிவரி இல்லை... ஹோட்டல் உரிமையாளர் சங்கம் அதிரடி அறிவிப்பு..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin