• Login
Friday, April 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்களுக்கு ஈரான் குறி | Iran targets US bases in Middle East

GenevaTimes by GenevaTimes
June 23, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்களுக்கு ஈரான் குறி | Iran targets US bases in Middle East
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டெஹ்ரான்: மத்​திய கிழக்​கில் அதி​கரித்து வரும் பதட்​டங்​களுக்கு மத்​தி​யில், ஞாயிற்​றுக்​கிழமை அதி​காலை ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலை​யங்​களை அமெரிக்க விமானப் படை தாக்​கியது. ஈரானின் ஃபோர்​டோ, நடான்ஸ் மற்​றும் இஸ்​பஹான் அணுசக்தி நிலை​யங்​கள் மீதான அமெரிக்க வான்​வழித் தாக்​குதலை தொடர்ந்து மேற்கு ஆசி​யா​வில் உள்ள ஒவ்​வொரு அமெரிக்க குடிமக​னும் அல்​லது ராணுவ வீரர்​களும் இப்​போது ஈரானின் இலக்​காக மாறி​யுள்​ளது என ஈரான் அரசு தொலைக்​காட்சி தெரி​வித்​துள்​ளது.

இது குறித்து ஈரான் மதகுரு கொமேனி​யின் நெருங்​கிய உதவி​யாளர் ஹொசைன் ஷரி​யத்​மதர் கூறுகை​யில், “ஈரானின் அணுசக்தி தளங்​கள் மீது அமெரிக்கா அத்​து​மீறி தாக்​ககுதல் நடத்​தி​யுள்​ளது. இதையடுத்​து, சிறிதும் தாம​திக்​காமல் உடனடி​யாக எதிர்த்​தாக்​குதல் நடத்த வியூ​கம் வகுக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி மத்​திய கிழக்​கில் உள்ள முக்​கிய அமெரிக்க ராணுவத் தளங்​களை ஈரான் குறி​வைத்​துள்​ளது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்​படையை தாக்​க​வும், பிரிட்​டிஷ், ஜெர்​மனி, பிரெஞ்சு மற்​றும் அமெரிக்க கப்​பல்​களுக்கு ஹோர்​முஸ் ஜலசந்​தியை மூட​வும் ஈரானிய படைகளுக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது” என்​றார்.

பஹ்ரைன்: அமெரிக்க கடற்​படை​யின் மத்​திய கட்​டளை தலை​மையகம் பஹ்ரைனில் உள்​ளது. இது, பாரசீக வளை​கு​டா​வில் அமெரிக்கா​வுக்கு முக்​கிய​மான இடம். பஹ்ரைனின் ஆழ்​கடல் துறை​முகத்​தில் விமானம் தாங்​கி​கள் உட்பட அமெரிக்​கா​வின் மிகப்​பெரிய ராணுவ கப்​பல்​களை நிறுத்த முடி​யும்.

கத்​தார்: மத்​திய கிழக்​கின் மிகப்​பெரிய அமெரிக்க ராணுவதள​மான அல் உதெய்த் விமான தளம் கத்​தா​ரில்​தான் உள்​ளது. இது, அமெரிக்​கா​வின் போர் விமானங்​களை​யும், 379-வது விமான படைப்​பிரிவை​யும் கொண்​டுள்​ளது.

இராக்: அல்​-அன்​பர் கவர்​னரேட்​டில் உள்ள அல் அசாத் விமானத் தளம் மற்​றும் எர்​பிலில் உள்ள அல் ஹரிர் விமானத் தளம் உட்​பட இராக்​கில் அமெரிக்கா பல்​வேறு துருப்​பு​களை நிலைநிறுத்​தி​யுள்​ளது. 2003 போருக்​குப் பிறகு இராக் அமெரிக்​கா​வின் நெருங்​கிய நட்பு நாடாக மாறி​யுள்​ளது.

சிரி​யா: அமெரிக்கா இங்கு பல ஆண்​டு​களாக பல்​வேறு பகு​தி​களில் ராணுவ நிலைகளை கொண்​டுள்​ளது. இராக், ஜோர்​டான் எல்​லைகளுக்கு அருகே தெற்கு சிரி​யா​வில் அமெரிக்​கா​வின் அல் தான்ப் காரிசன் ராணுவ தளம் உள்​ளது.

இதேபோன்​று, குவைத், மற்​றும் ஐக்​கிய அரபு அமீரகத்​தி​லும் அமெரிக்​கா​வின் முக்​கிய கடற்​படை, வி​மானப் படை தளங்​கள் உள்​ளன. இந்த தளங்களை குறி​வைத்து ஈரான்​ தாக்​குதல்​ நடத்​தும்​ என்​று எதிர்பார்க்கப்​படுகிறது.

கமேனி எச்சரிக்கை: ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா கமேனி எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “எங்களது ஸயோனிஸ்ட் எதிரிகள் மிகப் பெரிய தவறு செய்துவிட்டார்கள். பெரும் குற்றம் புரிந்துள்ளார்கள். இஸ்ரேல் தண்டிக்கப்பட வேண்டிய நாடு. தண்டனை தொடர்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால், அந்த எச்சரிக்கைப் பதிவில் அமெரிக்காவை பற்றி கமேனி எதுவும் குறிப்பிடவில்லை. அதேவேளையில், ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் அமீர் சையத் இராவானி கூறுகையில், “அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும். எந்த நேரத்தில், எத்தகைய தாக்குதல் நடத்தப்படும் என்பதை ஈரான் ராணுவம் முடிவு செய்யும்” என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

ஈரான் தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு! | Iran attack Crude oil prices hit 5 month highs

Next Post

கேபிள் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுப்பீர்: அந்தோணி லோக் | Makkal Osai

Next Post
கேபிள் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுப்பீர்: அந்தோணி லோக் | Makkal Osai

கேபிள் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுப்பீர்: அந்தோணி லோக் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin