தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து நேரடியாக பணத்தை எடுத்துக் கொள்வதற்கு உபயோகமாக இருப்பது டெபிட் கார்டு ஆகும். மேலும், பரிவர்த்தனைகளுக்கும் கூட இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். டெபிட் கார்டு என்பது நம் வங்கிக் கணக்குடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும் சூழலில் பின் நம்பர் பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம்.
மோசடியாக பரிவர்த்தனைகளைத் தடுக்கும் வகையில்தான் டெபிட் கார்டுக்கு பின் நம்பர் கொடுக்கப்படுகிறது. அதே சமயம், டெபிட் கார்டுகளை அதன்பின் நம்பருடன் சேர்த்து தொலைக்கின்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
அதேபோல நம்முடைய டெபிட் கார்டை திட்டமிட்டு திருடும் சிலர், எதோ ஒரு வகையில் நம் பின் நம்பரை கண்டுபிடித்து அல்லது யூகித்து பண மோசடி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். டெபிட் கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ அதுகுறித்து உடனடியாக நாம் வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
நீங்கள் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர் என்றால் அவர்களுடைய நெட் பேங்கிங் மற்றும் எஸ்.எம்.எஸ். வசதிகளைப் பயன்படுத்தி உங்கள் டெபிட் கார்டை டீஆக்டிவேட் செய்யலாம் அல்லது பிளாக் செய்யலாம்.
டோல் ஃப்ரீ நம்பர் :
உங்கள் டெபிட் கார்டை நீங்கள் துரிதமாக பிளாக் செய்ய வேண்டும் என்று விரும்பினால் உடனடியாக 1800 112211 அல்லது 1800 425 3800 என்ற எண்ணுக்கு அழைக்க வேண்டும். அந்த டோல் ஃப்ரீ நம்பருக்கு அழைத்த பின்னால், ஐவிஆர்எஸ் மூலமாக தெரிவிக்கப்படும் நடைமுறையை பின்பற்றி உங்கள் கார்டை பிளாக் செய்து கொள்ளலாம்.
இண்டர்நெட் பேங்கிங் மூலமாக பிளாக் செய்வது எப்படி?
1.
www.onlinesbi.com
என்ற தளத்தை பார்வையிடுங்கள்.
2. உங்கள் யூசர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி தளத்தினுள் நுழையவும்.
3. இ-சர்வீசஸ் என்ற பிரிவின் கீழ் சென்று ஏடிஎம் கார்டு சர்வீஸ் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதைத் தொடர்ந்து ஏடிஎம் கார்டை பிளாக் செய்வதற்கான ஆப்சனை கிளிக் செய்யவும்.
4. இப்போது ஏற்கனவே பிளாக் செய்யப்பட்ட அட்டைகள் மற்றும் செயல்பாட்டில் உள்ள அட்டைகளின் விவரங்கள் உங்களுக்கு பட்டியலிட்டு காட்டப்படும். அட்டைகளில் உள்ள முதல் 4 எண்கள், இறுதியாக உள்ள 4 எண்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும்.
5. தொடர்ந்து செயல்படுத்துவதற்கு, நீங்கள் எந்த அட்டையை பிளாக் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும். எதனால் அதனை பிளாக் செய்ய விரும்புகிறீர்கள் என்ற விவரத்தை தெரிவிக்கவும்.
6. இதை உறுதி செய்யும் முன்பாக தேவையான இன்னபிற விவரங்களையும் குறிப்பிட வேண்டியிருக்கும்.
7. இறுதியாக பிளாக் செய்வதை உறுதி செய்ய ஃப்ரோபைல் பாஸ்வேர்டு கொடுக்க வேண்டும் அல்லது ஓடிபி எண் உள்ளிட வேண்டும்.
8. உறுதி செய்க என்ற ஆப்சனை நீங்கள் கிளிக் செய்தவுடன் உங்கள் கார்டு பிளாக் செய்யப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…