• Login
Tuesday, April 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘WTC ஃபைனலில் தென் ஆப்பிரிக்காவுக்கு ஆதரவாக தேசம் நிற்கும்’ – ஏபி டிவில்லியர்ஸ் உணர்ச்சிகரம் | nation will stand by South Africa in WTC final AB de Villiers emotional

GenevaTimes by GenevaTimes
June 7, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
‘WTC ஃபைனலில் தென் ஆப்பிரிக்காவுக்கு ஆதரவாக தேசம் நிற்கும்’ – ஏபி டிவில்லியர்ஸ் உணர்ச்சிகரம் | nation will stand by South Africa in WTC final AB de Villiers emotional
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜூன் 11-ம் தேதியன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இறுதிப்போட்டி தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய தருணம், தேசமே எங்கள் அணியின் பின்னால் இருக்கிறது என்று 360 டிகிரி பேட்ஸ்மேன், ‘ஒயிட் ரிச்சர்ட்ஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸ் உணர்ச்சி வயப்பட்டுள்ளார்.

தனியார் டி20 லீக் கிரிக்கெட்டுகளின் பெருக்கமும் ஐசிசியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்திய அணியின் ஆதிக்கத்தினால் டெஸ்ட் போட்டி என்பதே இந்த 3 அணிகளுக்கும் இடையேயாகக் குறுக்கப்பட்டிருக்கும் வேளையில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் இறுதிப்போட்டியில் ஆடுவது உண்மையில் கொண்டாடப்பட வேண்டிய தருணம் தான்.

இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஏபி டிவில்லியர்ஸ் கூறியதாவது: தென் ஆப்பிரிக்கக் கிரிக்கெட்டிற்கு இது மிகப்பெரிய தருணம். லார்ட்ஸில் இறுதிப் போட்டி. ஒட்டுமொத்த தேசமும் எங்கள் அணியின் பின்னால் ஆதரவாகத் திரண்டெழும். வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்.

எனக்கு இந்த மோதல் மிகவும் உற்சாகம் தருகிறது. அணி நல்ல சமச்சீராக உள்ளது. நிச்சயம் ஆஸ்திரேலியாவை அதிர்ச்சிக்குள்ளாக்குவோம், ஏமாற்றத்துக்குள்ளாக்குவோம் என்று நம்புகிறேன். நான் ஏன் ஆஸ்திரேலியாவை ‘அப்செட்’ செய்வோம் என்று கூறினேன் என்றால், அந்த அணிதான் வெற்றி பெறும் அணியாக உள்ளது.

ஆஸ்திரேலிய அணி அனுபவம் வாய்ந்தது. நன்கு எண்ணெய் ஊற்றப்பட்டு துல்லியமாக இயங்கும் எந்திரம் போன்றது அந்த அணி. ஆகவே, தென் ஆப்பிரிக்காவுக்கு எதுவும் சுலபம் அல்ல. ஆனால், எங்கள் அணியிலும் நிறைய ஃபார்மில் உள்ள வீரர்கள் உள்ளனர். இவர்கள் பெரிய நெஞ்சம் படைத்தவர்கள், இந்த அரங்கில் தங்களை நிரூபிக்க ஆர்வம் கொண்ட வீரர்கள் இவர்கள்.

பல வீரர்களுக்கு லார்ட்ஸ் மைதானம் இதுதான் முதல் முறை. எனினும் விரைவில் செட்டில் ஆவார்கள் என்று நினைக்கிறேன். நான் உண்மையிலேயே ஆர்வமாக இருக்கிறேன். நிச்சயம் இது ஒரு அருமையான கிரிக்கெட் போட்டியாக இருக்கும். இது இறுதிப் போட்டி. இரு அணிகளும் இந்த இறுதிப்போட்டிக்கு கடினமான போட்டிகளில் ஆடி முன்னேறி வந்துள்ளன என்றார்.

தென் ஆப்பிரிக்க அணி: டோனி டி சோர்சி, ரியான் ரிக்கிள்டன், அய்டன் மார்க்ரம், தெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்கம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரைன், வியான் முல்டர், மார்க்கோ யான்சென், கார்பின் பாஷ், கேகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, டேன் பேட்டர்சன், கேஷவ் மகராஜ், சேனுரன் முத்துசாமி.

ஆஸ்திரேலிய அணி: உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, ஜாஷ் இங்லிஷ், கேமரூன் கிரீன், பியூ வெப்ஸ்டர், பாட் கமின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட், நேதன் லயன், மேத்யூ குனேமன்.



Read More

Previous Post

கணவனின் ரகசிய காதலியை தாக்கிய மனைவி..! வீடியோ வெளியாகி பரபரப்பு

Next Post

78 வயதான முதியவரின் முயற்சியால் ஆண்டுக்கு ஒரு முறையாவது இறைச்சி சாப்பிடும் மக்கள் – உருக்கமான பதிவு! 

Next Post
78 வயதான முதியவரின் முயற்சியால் ஆண்டுக்கு ஒரு முறையாவது இறைச்சி சாப்பிடும் மக்கள் – உருக்கமான பதிவு! 

78 வயதான முதியவரின் முயற்சியால் ஆண்டுக்கு ஒரு முறையாவது இறைச்சி சாப்பிடும் மக்கள் - உருக்கமான பதிவு! 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin