சிங்கப்பூர் புளோக் ஒன்றில் ஆடவர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
புக்கிட் மேரா வியூ புளோக் 117ல் உள்ள வாடகை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அண்டை வீட்டார் கவனித்ததை அடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சிங்கப்பூரில் வேலை செய்யும் கணவர்; குழந்தையுடன் உயிரை மாய்துகொண்ட மனைவி… புதுக்கோட்டையில் சோகம்
கடந்த மே 31 சனிக்கிழமை காலை சுமார் 11:10 மணியளவில் 81 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இறந்த ஆடவர் காது கேளாதவர் என்றும் அவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும் ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.
அவருக்கு மகன் ஒருவர் இருப்பதாகவும், ஆனால் அவரை தொடர்ந்து பார்த்தது இல்லை என்றும் அக்கம்பக்க குடியிருப்பாளர் ஒருவர் கூறினார்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, இதில் எந்த சதிச்செயலும் இல்லை என்று போலீசார் கூறினர்.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
பொது இடத்தில் சிறுநீர் கழித்து, சத்தம் எழுப்பி அட்டகாசம் – வார இறுதியில் கூடும் மர்ம கும்பல்
Photos: Shin Min Daily News & Google Maps