• Login
Saturday, July 5, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

18-வது ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்? – இறுதிப் போட்டியில் பஞ்சாப், பெங்களூரு இன்று பலப்பரீட்சை | Who will win 18th IPL trophy Punjab kings rcb to clash for title in final today

GenevaTimes by GenevaTimes
June 3, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
18-வது ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்? – இறுதிப் போட்டியில் பஞ்சாப், பெங்களூரு இன்று பலப்பரீட்சை | Who will win 18th IPL trophy Punjab kings rcb to clash for title in final today
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அகமதாபாத்: 18-வது ஐபிஎல் கிரிக்கெட் கோப்பை இறுதிப் போட்டியில் இன்று பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

18-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. மொத்தம் நடைபெற்ற 70 லீக் போட்டிகளின் முடிவில் பெங்களூரு, பஞ்சாப், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்ற முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு அணி, பஞ்சாப் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து 30-ம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர்-1 ஆட்டத்தில் பலம் வாய்ந்த குஜராத் அணியை, மும்பை அணி தோற்கடித்து தகுதிச் சுற்று-2 ஆட்டத்துக்கு முன்னேறியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற தகுதிச் சுற்று-2 ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை சாய்த்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. ஜானி பேர்ஸ்டோ 38, திலக் வர்மா 44, சூர்யகுமார் யாதவ் 44, ஹர்திக் பாண்டியா 15, நமன் திர் 37 ரன்கள் சேர்த்தனர்.

பின்னர் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. இதையடுத்து பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

பலம்வாய்ந்த மும்பை அணியின் பந்துவீச்சை சிதைத்து அணியை வெற்றி பெற வைத்த ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

அவருக்கு உறுதுணையாக ஜோஷ் இங்லிஷ் 38, பிரியான்ஷ் ஆர்யா 20, நேஹல் வதேரா 48 ரன்கள் சேர்த்தனர்.

இந்நிலையில் இன்று (ஜூன் 3) அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் கோப்பைக்காக மோதவுள்ளன.

2014-க்குப் பிறகு முதன்முறையாக பஞ்சாப் அணி இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது. 2014-ல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் கோப்பையை இழந்திருந்தது பஞ்சாப்.

பேட்டிங்கில் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்லிஷ், ஸ்ரேயஸ் ஐயர், நேஹல் வதேரா, சஷாங் சிங், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோருடன் வலுவாகக் காணப்படுகிறது. பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், கைல் ஜேமிசன், ஸ்டாய்னிஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், யுவேந்திர சாஹல், விஜய்குமார் வைசாக் ஆகியோர் கொண்ட படையுடன் எதிரணியை மிரட்டி வருகிறது.

அதேபோல் பெங்களூரு அணி 4-வது முறையாக இறுதிப் போட்டியில் கால் பதித்துள்ளது. ஏற்கெனவே 2009, 2011, 2016-ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெங்களூரு அணி கோப்பையை இழந்திருந்தது. இம்முறையை கோப்பையை வென்றே ஆகவேண்டும் என களம்புகுந்துள்ளது.

இந்தப் போட்டியில் யார் கோப்பையை வென்றாலும், ஒரு புதிய அணி கோப்பையை வெல்லப் போவது நிச்சயமாகி உள்ளது.

பெங்களூரு அணியின் பிலிப் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், கேப்டன் ரஜத் பட்டிதார், லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தினால் அந்த அணிக்கு வெற்றி நிச்சயம்.

அதேபோல் பவுலிங்கில் புவனேஸ்வர் குமார், யஷ் தயாள், ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, கிருணல் பாண்டியா ஆகியோர் எதிரணி வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கத் தயாராக உள்ளனர்.

நிறைவு விழா: போட்டிக்கு முன்னதாக மாலை 6 மணிக்கு நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன் கலந்துகொண்டு, இந்தியராணுவப்படையினரின்புகழைப் பாடவுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இடம்பெற்றிருந்த ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாகவும், பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இசை நிகழ்ச்சி அமைந்திருக்கும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரூ.20 கோடி பரிசு: ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.20| கோடி கிடைக்கும். 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.13 கோடியும், 3-வது இடம் பெறும் அணிக்கு ரூ.7 கோடியும், 4-வது இடம் பெறும் அணிக்கு ரூ.6.5 கோடியும் கிடைக்கும்.

நேருக்கு நேர்: மொத்த ஆட்டங்கள் 36 – பெங்களூரு – 18 வெற்றி, பஞ்சாப் 18 வெற்றி

இதுவரை சாம்பியன்கள்…

  • 2008 – ராஜஸ்தான் ராயல்ஸ்
  • 2009 – டெக்கான் சார்ஜர்ஸ்
  • 2010 – சென்னை சூப்பர் கிங்ஸ்
  • 2011 – சென்னை சூப்பர் கிங்ஸ்
  • 2012 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • 2013 – மும்பை இந்தியன்ஸ்
  • 2014 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • 2015 – மும்பை இந்தியன்ஸ்
  • 2016 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • 2017 – மும்பை இந்தியன்ஸ்
  • 2018 – சென்னை சூப்பர் கிங்ஸ்
  • 2019 – மும்பை இந்தியன்ஸ்
  • 2020 – மும்பை இந்தியன்ஸ்.
  • 2021 – சென்னை சூப்பர் கிங்ஸ்
  • 2022 – குஜராத் டைட்டன்ஸ்
  • 2023 – சென்னை சூப்பர் கிங்ஸ்
  • 2024 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்



Read More

Previous Post

பிரதமா் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை குழு கூட்டம்

Next Post

பெண்களை தொழில்முனைவோராக்க ‘கொற்றவை’ ஆன்லைன் வணிக தளம்: ஸ்ரீதர் வேம்பு தொடங்கிவைத்தார் | kotravai app for to make women entrepreneurs

Next Post
பெண்களை தொழில்முனைவோராக்க ‘கொற்றவை’ ஆன்லைன் வணிக தளம்: ஸ்ரீதர் வேம்பு தொடங்கிவைத்தார் | kotravai app for to make women entrepreneurs

பெண்களை தொழில்முனைவோராக்க ‘கொற்றவை’ ஆன்லைன் வணிக தளம்: ஸ்ரீதர் வேம்பு தொடங்கிவைத்தார் | kotravai app for to make women entrepreneurs

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin