Last Updated:
பும்ராவின் யார்க்கரை பவுண்டரிக்குத் தட்டிய ஸ்ரேயாஸ் ஐயரின் ஷாட் வைரலாகி, ஏ.பி.டிவிலியர்ஸ் அதை ‘Shot of the IPL 2025’ என புகழ்ந்துள்ளார். பஞ்சாப் – ஆர்சிபி அணிகள் இன்று இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
யார்க்கர் கிங் பும்ராவின் பந்தில் ஸ்ரேயாஸ் அடித்த பவுண்டரி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துல்லியமாக வீசிய யார்க்கரைச் சரியாக யூகித்து ஸ்ரேயாஸ் பவுண்டரிக்குத் தட்டிவிட்டதைப் பார்த்து பும்ராவே ஒரு நிமிடம் திகைத்துப் போய் நின்றார்.
ஐபிஎல் 2025 தொடரில் இறுதிப்போட்டியில் ஆர்சிபி – பஞ்சாப் அணிகள் இன்று விளையாட உள்ளன. ப்ளே ஆஃப் குவாலிஃபையர் 2 ஆம் சுற்றில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் சேர்த்தது. சூர்யாகுமார் யாதவ், திலக் வர்மா அதிரடியாக விளையாடி பஞ்சாப் அணிக்கு டஃப் கொடுத்தனர்.
மும்பை அணியில் வலுவான பந்துவீச்சாளர்கள் இருந்த போதும் பஞ்சாப் அணி எளிதாக இலக்கை எட்டியது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான ஆட்டமே பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இந்தப் போட்டியின் போது பும்ரா வீசிய யார்க்கர் பந்தை ஸ்ரேயாஸ் பவுண்டரிக்குத் தட்டிவிட்டார். இதைப் பார்த்த பும்ராவிற்கு எப்படி பவுண்டரி போனது என ஒரு நிமிடம் திகைத்துப் போய் நின்றார். ஸ்ரேயாஸ் ஐயரின் இந்த ஷாட்டைப் பலர் பாராட்டி வரும் நிலையில் ஏ.பி.டிவிலியர்ஸ் இதை ‘Shot of the IPL 2025’ என்று புகழ்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
இதனிடையே இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் – ஆர்சிபி அணிகள் மோதும் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. அகமதாபாத் மைதானத்தில் இன்று மழை பெய்ய 66 சதவீத வாய்ப்புகள் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றைய போட்டியில் மழை குறுக்கிட அதிகம் வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் போட்டி தடையின்றி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
June 03, 2025 8:42 AM IST