ரூ.500-க்கு தாத்தா வாங்கிய எஸ்பிஐ பங்கு ஆவணத்தை பேரன் கண்டெடுத்துள்ளார்.
சண்டிகரை சேர்ந்தவர் தன்மே மோதிவாலா. இவர் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் தனது குடும்ப சொத்துகள் தொடர்பான ஆவணங்களை தனது வீட்டியல் தேடியுள்ளார். அப்போது, பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) பங்கு சான்றிதழ் ஒன்றை அவர் கண்டெடுத்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “எனது தாத்தா 1994 ஆம் ஆண்டு ரூ.500-க்கு எஸ்பிஐ பங்குகளை வாங்கி உள்ளார். அதன் பிறகு அவர் இதை மறந்துவிட்டிருக்கிறார். இதை ஏன் வாங்கினோம் என்று கூட அவருக்கு தெரியவில்லை. என் தாத்தா வாங்கி வைத்துள்ள ரூ.500 மதிப்பிலான எஸ்பிஐ பங்கின் இப்போதைய மதிப்பு என்ன என்று சிலர் என்னிடம் கேட்டனர்.
டிவிடெண்ட் வருவாயை தவிர்த்து இதன் மதிப்பு மட்டும் ரூ.3.74 லட்சம் ஆகும். இது இப்போதைக்கு பெரிய தொகை இல்லை என்றாலும், 30 ஆண்டுகளில் ரூ.500 முதலீடு 750 மடங்கு லாபம் கொடுத்துள்ளது. உண்மையிலேயே இது பெரிய விஷயம்.
இந்த பங்கு சான்றிதழை டிமேட் கணக்கில் வரவு வைப்பது மிகவும் சிக்கலானது. இது தொடர்பாக துறை சார்ந்தவர்களின் ஆலோசனையை கேட்டுள்ளேன். இந்தபங்குகளை நான் விற்க மாட்டேன்” என பதிவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…