• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

லஞ்சம் கேட்டு மிரட்டிய அமலாக்கத்துறை அதிகாரி.. தொழிலதிபர் எடுத்த அதிரடி முடிவு.. என்ன நடந்தது?

GenevaTimes by GenevaTimes
May 30, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
லஞ்சம் கேட்டு மிரட்டிய அமலாக்கத்துறை அதிகாரி.. தொழிலதிபர் எடுத்த அதிரடி முடிவு.. என்ன நடந்தது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 30, 2025 9:01 PM IST

ஒடிசா மாநிலத்தில் ED இணை இயக்குநர் சிந்தன் ரகுவம்சி தொழிலதிபரிடம் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற முயன்றபோது சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சிந்தன் ரகுவம்சிசிந்தன் ரகுவம்சி
சிந்தன் ரகுவம்சி

ஒடிசா மாநிலத்தில் அமலாக்கத்துறை இணை இயக்குநர் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து லஞ்சம் பெற முயன்றபோது சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அமலாக்கத் துறையின் இணை இயக்குநராக செயல்பட்டு வந்தவர் சிந்தன் ரகுவம்சி (chindan raguvamshi). இவர் சுரங்க நிறுவனர் ஒருவருக்கு எதிரான நிதி முறைகேடுகள் தொடர்பான வழக்கை கையாண்டு வந்துள்ளார். இந்நிலையில், அந்த தொழிலதிபரை நேரடியாக சந்தித்த சிந்தன், அமலாக்கத்துறை நடவடிக்கையிலிருந்து விடுவிப்பதாகவும், அதற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் தருமாறும் கேட்டுள்ளார்.

இந்நிலையில், லஞ்சம் வாங்குவதற்கு ஈடாக ED ஆல் தொடங்கப்பட்ட விசாரணை செயல்முறைகளை கையாளவோ அல்லது நீர்த்துப்போகச் செய்யவோ உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுத்தால் மேலும் சில சலுகைகள் வழங்கப்படும் என பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த தொழிலதிபருக்கு லஞ்சம் கொடுப்பதில் சற்றும் விருப்பம் இல்லை சிந்தன் ரகுவம்சியோ தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த பிரச்சினையிலிருந்து எப்படி வெளிவருவது என யோசித்த தொழிலதிபர் சிபிஐ-யிடம் இதுகுறித்து ரகசியமாக புகார் அளித்துள்ளார். அதன்பேரில், அமலாக்கத்துறை அதிகாரிகளை பொறிவைத்து பிடிக்க திட்டம் தீட்டினர். அதன்படி முதல்கட்டமாக 20 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறி ஒரு ரகசிய இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். பணத்தை வாங்க வந்த ரகுவம்சியை மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அவரை புவனேஸ்வரில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். சிந்தன் ரகுவம்சி குறைந்தது 9 தொழிலதிபர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்களிடமும் லஞ்சம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளாரா? என்பது குறித்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஆனால், இந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐ எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை. இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Location :

Odisha (Orissa)

Read More

Previous Post

அரசு ஊழியர்களுக்கு பிரித்தானிய அரசின் அதிரடி அறிவிப்பு

Next Post

ரோஹித் விளாசல்: குஜராத்துக்கு 229 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை | IPL Eliminator | mumbai indians power plays gujarat titans sets 229 runs as target ipl eliminator

Next Post
ரோஹித் விளாசல்: குஜராத்துக்கு 229 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை | IPL Eliminator | mumbai indians power plays gujarat titans sets 229 runs as target ipl eliminator

ரோஹித் விளாசல்: குஜராத்துக்கு 229 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை | IPL Eliminator | mumbai indians power plays gujarat titans sets 229 runs as target ipl eliminator

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin