Last Updated:
இந்திய பங்குச்சந்தைகள் இரண்டாவது நாளாக சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 239 புள்ளிகள், நிஃப்டி 73 புள்ளிகள் குறைந்தன. ஆட்டோமொபைல், உலோகத்துறை பங்குகள் சரிவை கண்டன.
இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 239 புள்ளிகள் குறைந்து 81,312 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது.
இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 73 புள்ளிகள் குறைந்து 24,752 புள்ளிகளாக வணிகம் முடிந்தது.
ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பத்துறை, உலோகத்துறை பங்குகளை விற்று லாபம் பார்க்க முதலீட்டாளர்கள் முற்பட்டதால் இந்திய சந்தைகளில் சரிவு காணப்பட்டது.
இன்ஃபோ எட்ஜ், எல்ஐசி, உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தை பதிவு செய்தன. ஐடிசி, பாரத் டைனாமிக்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை கண்டன.

First Published :
May 28, 2025 10:18 PM IST


