இது தொடர்பாக சிந்தியா ஹாஃப்மேனின் நெருங்கிய தோழி டெனாலி ப்ரெஹ்மரிடம் காவல்துறை விசாரித்தது. அப்போது அவர், “டைலர் என்ற சமூக வலைதளப் பயனாளி ஒருவர் என்னையும், என்னுடைய நண்பர்களையும் தொடர்பு கொண்டார். அவர் எங்களிடம் “நான் டைலர்… பெரும் பணக்காரன்.
![அமெரிக்கா சிறை](https://gumlet.vikatan.com/vikatan%2F2023-04%2F6d894aed-f4f1-4df1-937a-7618a399d4f9%2Fprison1.jpg?auto=format%2Ccompress)
![அமெரிக்கா சிறை](https://gumlet.vikatan.com/vikatan%2F2023-04%2F6d894aed-f4f1-4df1-937a-7618a399d4f9%2Fprison1.jpg?auto=format%2Ccompress&w=1200)
உங்களின் தோழி சிந்தியா ஹாஃப்மேனை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்தால், உங்களுக்கு 9 மில்லியன் டாலர் தருகிறேன். ஆனால், சிந்தியா ஹாஃப்மேன் கொலைசெய்யப்பட்டவுடன் அதை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எனக்கு அனுப்ப வேண்டும்’ எனக் கூறினார். நானும் என்னுடைய நண்பர்களும், அந்த நபர் சொன்னதை நம்பினோம். அதற்காக சிந்தியா ஹாஃப்மேனை கொலைசெய்ய நான், என்னுடைய நண்பர் கெய்டன் மெக்கின்டோஷ் உட்பட மூவர் திட்டமிட்டோம்.