• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

7.90% வரை வட்டியுடன் இந்தியன் வங்கியின் புதிய நிலையான வைப்புத் தொகை திட்டம்… முழு விவரம் இதோ…!

GenevaTimes by GenevaTimes
May 26, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
7.90% வரை வட்டியுடன் இந்தியன் வங்கியின் புதிய நிலையான வைப்புத் தொகை திட்டம்… முழு விவரம் இதோ…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியன் வங்கி மே 8, 2025 முதல் நடைமுறைக்கு வரும், “IND செக்யூர்” என்கிற புதிய நிலையான வைப்புத் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் குறைந்தது ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.3 கோடி வரையில் முதலீடு செய்ய முடியும், இந்தத் திட்டத்தில் சேர செப்டம்பர் 30, 2025 கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையான வைப்புத்தொகை திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளும் பொதுமக்கள் அனைவருக்கும் 7.15 சதவீத வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கு 7.65 சதவீதமும், சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 7.90 சதவீதமும் கொண்ட வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.

இது தவிர, நிலையான வளர்ச்சியை கவனத்தில் கொள்ளும் வகையில், “IND கிரீன்” எனப்படும் நிலையான வைப்புத்தொகை திட்டத்தை இந்தியன் வங்கி தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்தத் திட்டமும் ரூ.1,000 முதல் ரூ.3 கோடி வரையிலான முதலீடுகளை அனுமதிக்கிறது. இந்த திட்டத்தின் நிலையான முதிர்வு காலம் 555 நாட்கள் ஆகும். இந்த நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் இணையும் பொதுமக்களுக்கு 6.80 சதவீத வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கு 7.30 சதவீதமும், சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 7.55 சதவீதமும் வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.

இதற்கிடையில், வங்கி அதன் முந்தைய சில்லறை கால நிலையான வைப்புத்தொகை திட்டங்களான, “IND சூப்பர் 400 டேஸ்” மற்றும் “IND சுப்ரீம் டேஸ்” போன்ற நிலையான வைப்புத்தொகை திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும், 444 நாட்களுக்கு 7.15 சதவீதமும், 555 நாட்களுக்கு 6.80 சதவீதமும் வருமானம் தரும் சிறப்பு கால நிலையான வைப்புத்தொகைத் திட்டங்களை வங்கி தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்தியன் வங்கியின் புதிய “IND செக்யூர்” நிலையான வைப்புத் தொகையின் வட்டி விகிதங்கள் (%)

பொதுமக்களுக்கு – 7.15%

மூத்த குடிமக்களுக்கு – 7.65%

சூப்பர் மூத்த குடிமக்களுக்கு – 7.90%

வழக்கமான தவணைகளுக்கு, இந்தியன் வங்கி 1 வருட டெபாசிட்டுகளுக்கு 6.10 சதவீத வட்டியையும், 1 முதல் 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 7.10 சதவீதத்தையும், 2 முதல் 3 ஆண்டுகளுக்கு 6.70 சதவீதத்தையும், 3 முதல் 5 வருடங்கள் மற்றும் சரியாக 5 ஆண்டுகளுக்கு 6.25 சதவீதத்தையும் வழங்குகிறது.

இந்த மாற்றங்களுடன், சேமிப்புக் கணக்கு வட்டி விகிதங்களையும் இந்தியன் வங்கி கடந்த மாதம் திருத்தியது. ரூ.10 லட்சம் வரையிலான சேமிப்பு வைப்புத் தொகைகளுக்கான, வட்டி விகிதம் 2.90 சதவீதத்திலிருந்து 2.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ரூ.10 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலான டெபாசிட்டுகளுக்கு புதிய வட்டி விகிதம் 2.80 சதவீதமாகும். ஆனால், ரூ.2 கோடிக்கு மேல் உள்ள டெபாசிட்டுகளுக்கு முன்பு இருந்ததில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் 2.90 சதவீதத்தையே தொடர்ந்து வழங்கும். இந்தத் திருத்தம், இந்திய ரிசர்வ் வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை ஏப்ரல் 9ஆம் தேதியன்று இரண்டாவது முறையாக 25 அடிப்படை புள்ளிகள் குறைத்ததன் விளைவாக மாற்றியமைக்கப்பட்டது.

தமிழ் செய்திகள்/வணிகம்/

7.90% வரை வட்டியுடன் இந்தியன் வங்கியின் புதிய நிலையான வைப்புத் தொகை திட்டம்… முழு விவரம் இதோ…!

Read More

Previous Post

திறமையை விட இன்னொன்று மிக முக்கியம்.. கேப்டன் சுப்மன் கில்லுக்கு சுனில் கவாஸ்கர் அட்வைஸ்..

Next Post

“இந்தியாவின் முக்கிய எதிரி பாகிஸ்தான் அல்ல” – அமெரிக்கா பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு தகவல்!

Next Post
“இந்தியாவின் முக்கிய எதிரி பாகிஸ்தான் அல்ல” – அமெரிக்கா பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு தகவல்!

``இந்தியாவின் முக்கிய எதிரி பாகிஸ்தான் அல்ல" - அமெரிக்கா பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin