இந்த நிலையில், காங்கிரஸுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் குற்றச்சாட்டை அடுத்து சஞ்சய் நிருபத்தை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கம் செய்ய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளதாக வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இருந்தும் அவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக கூட்டணியில் சஞ்சய் நிருபம் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலின்போது சிவசேனைக்கு எதிராக கருத்து தெரிவித்த சஞ்சய் நிருபத்தை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்து கட்சியின் தலைமை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.