இருந்தாலும், இறந்து போனவரின் அடையாளத்தை தவறுதலாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு அல்லது வரி நோட்டீஸுகள் பெறாமல் பார்த்துக் கொள்வதற்கு இறந்து போனவரின் PAN கார்டை மீண்டும் ஒப்படைப்பது பரிந்துரை செய்யப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு சட்டபூர்வமாக அவருடைய PAN கார்டை கேன்சல் செய்யும்வரை அவரது PAN கார்டு செல்லுபடி ஆகும்.
அதனை கேன்சல் செய்யாவிட்டால், வங்கிக் கணக்கு திறப்பது, கடன்கள் வாங்குவது அல்லது அதிகாரப்பூர்வமற்ற முறையில் ரீஃபண்டுகளை பெறுவது போன்ற தவறான மோசடி காரணங்களுக்கு அவை பயன்படுத்தப்படலாம். அதுமட்டுமல்லாமல், இறந்து போனவரின் PAN கார்டை டீ-ஆக்டிவேட் செய்வது என்பது அந்த நபரின் பொருளாதார அடையாளத்தை சரியான வழியில் மற்றும் மரியாதைக்குரிய வழியில் ஓய்வுபெற உறுதி செய்வதாகும்.
தேவையான டாக்குமெண்ட்கள்:
இறந்து போன ஒரு நபரின் PAN கார்டை கேன்சல் செய்வதற்கு, அவருடைய ஒரிஜினல் PAN கார்டு, மருத்துவமனை அல்லது நகராட்சி அலுவலகம் வழங்கிய இறப்பு சான்றிதழ் மற்றும் கேன்சல் செய்யக்கோரி ஒரு கடிதம் ஆகிய டாக்குமெண்ட்களை சமர்ப்பிக்க வேண்டும். இதனுடன் நீங்கள் உங்களுடைய PAN கார்டின் ஒரு நகலையும், இறந்து போன நபருக்கும், உங்களுக்குமான உறவை நிரூபிக்கும் விதமான ஒரு ஆவணத்தையும் கொடுக்க வேண்டும். இதற்கு நீங்கள் வாரிசு சான்றிதழ், ஆதார் அட்டை போன்றவற்றை வழங்கலாம்.
ரத்து செய்வதற்கான கோரிக்கையை அனுப்புதல்:
இறந்து போனவரின் PAN கார்டை கேன்சல் செய்வதற்கான முதல் படியாக நீங்கள் வருமான வரித்துறையின் சட்ட அதிகார வரம்பிற்குட்பட்ட வருமான வரி விதிப்பு அதிகாரிக்கு ஒரு கடிதத்தை எழுத வேண்டும். அந்த கடிதத்தில் இறந்த நபரின் முழு பெயர், PAN நம்பர், இறந்த தேதி மற்றும் PAN கார்டை ரத்து செய்வதற்கான ஒரு கோரிக்கை போன்றவற்றை சேர்க்க வேண்டும். இதில் நீங்கள் கையெழுத்திட்டு, உங்களுடைய விவரங்களையும் வழங்க வேண்டும். கடிதத்தை தயார் செய்தவுடன், இதனுடன் வழங்க வேண்டிய ஆவணங்களோடு சேர்த்து அதனை நீங்கள் நேரடியாக தனிப்பட்ட முறையிலோ அல்லது தபால் மூலமாகவோ அதிகாரிக்கு அனுப்பலாம்.
சரியான வருமான வரி விதிப்பு அதிகாரியை தேர்வு செய்தல்:
PAN கார்டு வைத்திருப்பவர் வசிக்கும் இடம் அல்லது வருமானப் பிரிவின் அடிப்படையில் அவருக்கு ஒரு வருமான வரி விதிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பார். எனவே, உங்களுடைய சட்ட அதிகார வரம்புக்கு உட்பட்ட சரியான வரி விதிப்பு அதிகாரியை கண்டறிந்து, அவரிடம் கடிதத்தையும், டாக்குமெண்ட்களையும் நீங்கள் வழங்க வேண்டும். இதனை நீங்கள் வருமான வரித்துறையின் வெப்சைட்டில் உள்ள ‘நோ யுவர் AO’ வசதி மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
படிவம் 49A மூலமாக மாற்று செயல்முறை:
இறந்து போன ஒரு நபரின் PAN கார்டு ரத்து செய்வதற்கு ஒரு மாற்று முறையாக நீங்கள் படிவம் 49A-ஐ சமர்ப்பிக்கலாம். வெப்சைட்டில் டவுன்லோட் செய்து தேவையான இடங்களை நிரப்பி, இறந்து போன நபரின் PAN கார்டு விவரங்களை வழங்க வேண்டும். பிறகு தேவையான டாக்குமெண்ட்களை சேர்த்து இந்த படிவத்தை நீங்கள் அருகிலுள்ள NSDL PAN சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கோரிக்கையை சமர்ப்பித்த பிறகு என்ன ஆகும்?
உங்களுடைய கோரிக்கையை சமர்ப்பித்த பிறகு, AO நீங்கள் வழங்கிய டாக்குமெண்ட்களை வெரிஃபை செய்து, PAN கார்டை ரத்து செய்வார். இது தொடர்பாக உங்களுக்கு எந்த ஒரு கடிதமும், தகவலும் அனுப்பப்படாது என்றாலும் கூட, AO அலுவலகத்திற்கு போன் செய்தோ அல்லது நேரடியாக சென்றோ அதனை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்:
இ-ஃபைலிங் போர்ட்டலில் PAN கார்டு ரத்து செய்வதற்கான எந்த ஒரு வசதியும் கிடையாது. மேலும் இறந்த நபர் ஏதேனும் வருமான வரி செலுத்த வேண்டி இருந்தாலோ அல்லது அவருக்கு ரீஃபண்ட் வர வேண்டி இருந்தாலோ, சட்டத்திற்கு உட்பட்ட வாரிசு அதற்கான செயல்முறையை கவனித்துக் கொள்ளலாம். மேலும், இறந்துபோன ஒரு நபரின் PAN கார்டை பயன்படுத்தி பொருளாதார டிரான்சாக்ஷன்கள் செய்வது என்பது சட்டத்திற்கு புறம்பானது என்பதை மறந்து விடாதீர்கள்.

