Last Updated:
ஜெய்சங்கர் 6 நாட்கள் நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி பயணம் மேற்கொண்டு இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்களை விவாதிக்கவும் உள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 6 நாட்கள் அரசு முறை பயணமாக நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி நாடுகளுக்கு செல்கிறார்.
வெளிநாடுகளுடனான உறவை மேம்படுத்துவதற்கான முக்கிய துறையாக வெளியுறவுத்துறை திகழ்க்கிறது. இந்த நிலையில் நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி நாடுகளின் வெளியுறவுத்துறையினரின் அழைப்பை ஏற்று ஜெய்சங்கர் அந்த நாடுகளுக்கு புறப்பட இருக்கிறார்.
திங்கட்கிழமை புறப்படும் ஜெய்சங்கர், முதலில் நெதர்லாந்து செல்கிறார்.
அடுத்தடுத்த நாட்களில் டென்மார்க் மற்றும் ஜெர்மனிக்கும் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
ஜெய்சங்கரின் சுற்றுப்பயணத்தின்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்! – பயண திட்டம் என்ன?


