இரண்டு தனித்தனி பேருந்து விபத்துகளிலும், படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு கொண்டு செல்ல இரண்டு ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெலிமடையில் நேற்றும் (சனிக்கிழமை) 10, கொத்மலையில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 11 இடம்பெற்ற இரண்டு பேருந்து விபத்துகளில் காயமடைந்தவர்களே இவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமைச்சின் செயலாளரின் உத்தரவுப்படி, இலங்கை விமானப்படை ரத்மலானை விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர்களை நிறுத்தியுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த அவசர மருத்துவ வெளியேற்றங்களுக்காக இரண்டு பெல் 412 ஹெலிகாப்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

