இந்தநிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை குறிப்பிட்டு தில்லியில் இன்று(மே 6) நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியொன்றில் பேசிய பிரதமர் மோடி, “பெரிய முடிவுகள் எடுப்பதற்கும், இலக்குகளை எட்டுவதற்கும் தேசிய நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதும், நமது நாட்டின் திறன் மீது நம்பிக்கை கொள்வதும் மிக முக்கியம்.
உள்நாட்டு உற்பத்தியை மையப்படுத்திய நகர்விலிருந்து இப்போது அரசு மக்களின் முன்னேற்றத்தை மையப்படுத்திய நகர்வை நோக்கி முன்னேற்றப் பாதையில் செல்கிறது.
முந்தைய காலத்தில், இந்தியாவுக்கு சொந்தமான தண்ணீர் நாட்டைவிட்டு வெளியே சென்று கொண்டிருந்தது. ஆனால், இனிமேல், இந்தியாவின் நதி நீர் இனி நமது நாட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்” என்றார்.

