கடந்த மார்ச் 23-ம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், “அருணாச்சலப் பிரதேசத்துக்கு உரிமைக் கொண்டாடும் சீனா… இது புதிய பிரச்னை அல்ல. அந்நாடு தனது கோரிக்கையை தற்போது விரிவுபடுத்தியுள்ளது. ஆனால், அது முற்றிலும் நகைப்புக்குரியதாக இருக்கிறது. எனவே, நாங்கள் இதில் மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.


இந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை சீனாவின் மாண்டரின் மொழியிலும், திபெத்திய மொழியிலும் மாற்றியிருக்கும் சீன அரசு, அதைத் தனது அமைச்சகத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறது. இதற்கு முன்னர் மூன்று முறை இது போன்ற பெயர்மாற்ற நடவடிக்கையில் சீனா ஈடுபட்டிருக்கிறது.