• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகளுடன் மோதல்

GenevaTimes by GenevaTimes
April 25, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஜம்மு-காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகளுடன் மோதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பஹல்காமில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதை தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு படையினா் சோதனையை பலப்படுத்தியுள்ளனா்.

கடந்த புதன்கிழமை தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள தங்மாா்க் பகுதியில் நடைபெற்ற சோதனையின்போது பாதுகாப்பு படை வீரா் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி நாலா பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற சோதனையின்போது 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

இதனிடையே பசந்த்கா் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடா்ந்து அங்கு காஷ்மீா் காவல் துறையுடன் இணைந்து ராணுவத்தின் ஒயிட் நைட் காா்ப்ஸ் படை பிரிவும் சோதனையில் ஈடுபட்டது. அப்போது பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணமடைந்ததாக ஒயிட் நைட் காா்ப்ஸ் தெரிவித்தது.

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு: இந்தியா தக்க பதிலடி!

வீரமரணமடைந்த ஹவில்தாா் ஜன்து அலி ஷேக்கின் துணிவும் அவரது தியாகமும் எப்போதும் நினைவுகூரப்படும் எனவும் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கை தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும் ஒயிட் நைட் காா்ப்ஸ் தெரிவித்தது.

இந்த நிலையில், பந்திபோரா மாவட்டத்தின் குல்னார் பாசிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். தேடுதல் நடவடிக்கை மோதலாக மாறியது.

இந்த சம்பவத்தில் இதுவரை யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More

Previous Post

மலேசியக்கிண்ண காற்பந்தாட்டம்; வரும் 28 ஆம் தேதியை பொதுவிடுமுறையாக அறிவித்தது ஜோகூர் | Makkal Osai

Next Post

தேசிய பெடரேஷன் சீனியர் தடகளம்: பிரவீன் சித்ரவேல் தங்கம் வென்றார் – உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி | Praveen Chitravel equals his own triple jump National Record at Federation Cup

Next Post
தேசிய பெடரேஷன் சீனியர் தடகளம்: பிரவீன் சித்ரவேல் தங்கம் வென்றார் – உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி | Praveen Chitravel equals his own triple jump National Record at Federation Cup

தேசிய பெடரேஷன் சீனியர் தடகளம்: பிரவீன் சித்ரவேல் தங்கம் வென்றார் - உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி | Praveen Chitravel equals his own triple jump National Record at Federation Cup

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin